பொழுதுபோக்கு

நாக சைதன்யாவுடன் இணைந்தார் சாய் பல்லவி… அவரே கூறிவிட்டார்

  • September 21, 2023
  • 0 Comments

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தியா’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் ‘மாரி 2’, ‘என்.ஜி.கே’, ‘கார்க்கி’ என பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு […]

இலங்கை

யாழ்ப்பாணத்தில் பேருந்து ஒன்று தீயில் எரிந்து நாசமானது!

  • September 21, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது. ஆனைக்கோட்டை சாவல்காட்டு பகுதியில் வசிக்கும் பேருந்து உரிமையாளர் நேற்றைய தினம் இரவு தனது வீட்டின் முன்பாக பேருந்தினை நிறுத்தி வைத்திருந்த நிலையில், இவ்வாறு தீபிடித்து எரிந்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்பத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் பேருந்து முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து   மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம்

  • September 21, 2023
  • 0 Comments

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச நீதியைக் கோரிய ஜனநாயகப் போராட்டம் இன்று (21) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றது. இதன்போது போர் குற்றங்கள் செய்தவர்களை நீதிக்கு முன் நிறுத்து,பாலியல் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும்,74 வருட இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு வேண்டும்,இலங்கையில் இடம் பெற்ற போர் குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதி பொறிமுறையை உறுதி செய்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி […]

பொழுதுபோக்கு

வெங்கட் பிரபுவுடன் இணைந்த சினேகா…. வெளியானது ட்ரெய்லர்

  • September 21, 2023
  • 0 Comments

திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் இது ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்தாலும் […]

இலங்கை

திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

  • September 21, 2023
  • 0 Comments

திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் திகதி திருகோணமலை கொழும்பு வீதியினூடாக திலீபனின் உருவச் சிலையை கொண்டு வரும்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 பேருக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் சந்தேகத்திற்கு நேரில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஆறு பேரையும் கடந்த பதினெட்டாம் திகதி சீனக்குடா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது 21 ஆம் திகதி […]

இலங்கை

திருகோணமலையில் கடைக்கு சென்று கொண்டிருந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • September 21, 2023
  • 0 Comments

திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் நேற்றிரவு (20) உயிரிழந்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் -வெவ்சிறிகம பகுதியைச் சேர்ந்த தெபிலியனகே விமலரத்ன (69வயது) எனவும் தெரியவருகிறது. வீட்டிலிருந்து நடந்து கடைக்கு சென்று கொண்டிருந்தபோது இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை கந்தளாய் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை அதே பகுதியைச் சேர்ந்த தியவுல்பொத்த என்ற இடத்தில் பொலிஸ் SI ஒருவரும் யானையின் தாக்குதலினால் […]

ஆசியா

சீனாவை உலுக்கிய சூறாவளி.. ஒரே நாளில் 10 பேர் பலி

  • September 21, 2023
  • 0 Comments

சீனாவில் பல்வேறு நகரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர் இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த சூறாவளி காற்றில் பல்வறு உயிர்சேதங்கள், பொருள்சேதங்கள் ஏற்பட்டுள்ளன என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுங் மற்றும் யாசெங் நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சூறாவளி காற்று வீசியது. மேலும், சுகியன் நகரின் சில பகுதிகளில் […]

பொழுதுபோக்கு

த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

  • September 21, 2023
  • 0 Comments

40 வயதை கடந்தும் தரைத்துறையில் மின்னும் நடிகை திரிஷா கல்யாணத்துக்கு ரெடியாகிவிட்டார் என்ற செய்தி வந்திருக்கிறது. இவருக்கு எப்போ திருமணம் நடக்கும் என்று சினிமா வட்டாரத்தில் அதிகமாக பேசப்பட்டது. விரைவில் த்ரிஷா வீட்டில் கெட்டி மேளம் சத்தம் கேட்க இருக்கிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் எல்லோருடனும் ஜோடி சேர்ந்துவிட்டார். மேலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் மத்த நடிகைகளுக்கு வாய்ப்பே கிடைக்காத அளவுக்கு இவர் […]

கருத்து & பகுப்பாய்வு

ரணில் மீண்டும் ஜனாதிபதி ஆவாரா?

  • September 21, 2023
  • 0 Comments

முதலில் ஆரம்பத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டபோதும் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை காரணமாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ் நிலை காரணமாக பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதற்கே திட்டமஜடப்பட்டு வருவதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் படி அடுத்த வருடம் ஜூன் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்றை கலைக்கவேண்டிய சூழ் நிலையும் அவசியமும் ஜனாதிபதிக்கு ஏற்பட்டிருப்பதாகவும் எனவே பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்த ஏற்பாடுகள் மேற் கொள்ளப்படலாமென எதிர்வு கூறப்படுகிறது. 2020 ஆம் […]

வட அமெரிக்கா

நியூயார்க்கில் வலி நிவாரணியை உட்கொண்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • September 21, 2023
  • 0 Comments

நியூயார்க் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வலி நிவாரணியை உட்கொண்ட சிறுவன் உயிரிழந்துள்ளார். நியூயார்க் நகரில் உள்ள சிறுவர் பாடசாலை மற்றும் பராமரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து Fentanyl எனப்படுகின்ற 1 கி​லோகிராம் வலி நிவாரணி வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன. ஃபெண்டானில் (Fentanyl) எனப்படும் குறித்த வலி நிவாரணி புற்றுநோயாளிகள் மற்றும் வலிமிகுந்த அறுவை சிகிச்சை நடவடிக்கைகளில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை சக்திவாய்ந்த செயற்கை பைபெரிடைன் ஓபியாய்டு (synthetic piperidine opioid ) மருந்து ஆகும், […]