இலங்கை

திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் – சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

திலீபனின் உருவச்சிலை பாரவூர்தி மீது தாக்குதல் நடாத்திய சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி திருகோணமலை கொழும்பு வீதியினூடாக திலீபனின் உருவச் சிலையை கொண்டு வரும்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 14 பேருக்கு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சந்தேகத்திற்கு நேரில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட ஆறு பேரையும் கடந்த பதினெட்டாம் திகதி சீனக்குடா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதே நேரம் குறித்த வழக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் அண்ணாத்துரை தர்ஷினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் பத்தாம் மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கட்டளை இட்டார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்