இலங்கை

துப்பரவுப்பணியின் போது ஆலயக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களால் பரபரப்பு!

அம்பாறை – சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயில் கிணறொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கிணற்றில் நேற்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்ட துப்பரவுப்பணியின் போதே இவ்வாறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிணற்றில் இருந்து LMG துப்பாக்கி தோட்டாக்கள் 57, ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு இரண்டு, 261 தோட்டாக்கள், 0.22 துப்பாக்கிக்குரிய வெற்று தோட்டாக்கள் 46 அதற்குரிய தோட்டாக்கள் 3,எம் 16 துப்பாக்கிகுரிய தோட்டாக்கள் 11, ஒரு சுடர் துப்பாக்கி (Flare Gun) ஆகிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்கப்பட்ட ஆபத்தான பொருட்கள் குறித்த தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்