பொழுதுபோக்கு

“லியோ” டிக்கெட் வாங்க வந்த விஜய் ரசிகரின் கால் உடைந்ததால் பரபரப்பு

  • October 19, 2023
  • 0 Comments

‘லியோ’ படத்தின் முதல் நாள், முதல் காட்சியை பார்க்க ஆவலோடு இருந்த ரசிகர் டிக்கெட் வாங்க சுவற்றில் இருந்து குதித்த போது, கால் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை ஏற்கனவே தளபதி விஜய் வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கிய, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். தளபதி ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு இப்படம் ரிலீஸ் ஆனது. ஒரு […]

இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் யானைக்கு நீதி கிடைக்காவிட்டால் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவேன்: உரிமையாளர்

வனவிலங்கு அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண் யானை ‘சீதா’ செவ்வாய்க்கிழமை (18) பிற்பகல் லொறியில் மஹரகமவிற்கு அதன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக பேராதனை பல்கலைக்கழக கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு விஞ்ஞான பீட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்று மூன்று வாரங்களின் பின்னர் பெண் யானை மஹரகமவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். “சுமார் பதினைந்து நாட்களாக தூக்கமின்மையால், யானையின் வயிற்றுப் பகுதி வீங்கியிருக்கிறது. நீண்ட பயணத்தைத் தாங்க முடியாமல் போகும் அபாயத்தைக் […]

உலகம்

ஐரோப்பாவில் நிறுத்தப்படவுள்ள X வலைதள சேவை; எலோன் மஸ்க் அதிரடி!

  • October 19, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கைப்பற்றியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார். இந்த நிலையில் எக்ஸ் வலைதள சேவையை ஐரோப்பாவில் நிறுத்த எலோன் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஐரோப்பிய ஒன்றியம், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை ஏற்றுக்கொண்டது. இப்புதிய இணையதள ஒழுங்குமுறை சட்டம் காரணமாக ஐரோப்பிய பிராந்தியத்தில் எக்ஸ் செயலியின் இருப்பை அகற்றுவது அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பயனர்களைத் தடுப்பது […]

ஐரோப்பா

ஒலித்த எச்சரிக்கை மணி… விமான நிலையத்தில் தரையில் படுக்கவைக்கப்பட்ட ஜேர்மன் பிரதமர்!(வீடியோ)

  • October 19, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் உடனான போரில், இஸ்ரேலுக்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டுக்குச் சென்றிருந்த ஜேர்மனி பிரதமர் ஒலாஃப் ஷால்ஸ், ஏவுகணைத் தாக்குதலில் இருந்து தப்புவதற்காக விமான நிலைய தரையில் படுக்க வைக்கப்பட்டார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ரொக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து […]

ஐரோப்பா

பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் செல்ல திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

  • October 19, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கத்தினர் இடையே 13வது நாளாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார். மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 7ம் திகதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வீசி தாக்குதல் நடத்தினர்.இதையடுத்து, இஸ்ரேல் தரப்பில் பதிலடியாக தொடர்ந்து ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை […]

இலங்கை

தொண்டையில் சிக்கிய வாழைப்பழம்…வயோதிபருக்கு நேர்ந்த கதி!

  • October 19, 2023
  • 0 Comments

வாழைப்பழத்தின் சிறிய துண்டு சிக்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர். பன்னிபிட்டிய ஹிரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் கடற்படையின் ஓய்வுபெற்ற தொழில்நுட்ப அதிகாரியான ஹெட்டி கங்கணமாலையின் லக்ஷ்மன் ஹெட்டி பத்திரன (64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நபர் பல வருடங்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவரது மனைவி அவரை கவனித்து வருகிறார்.இந்நிலையில் கடந்த (18)ஆம் திகதி சாப்பாட்டுக்கு பின் வாழைப்பழம் கொடுத்துள்ளார். சாப்பிட்டுக் கொண்டிருந்த […]

உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் -அனைத்து மதத்தினருக்கும் அழைப்பு விடுத்துள்ள போப் பிரான்சிஸ்…

  • October 19, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு, அக்டோபர் 27ம் திகதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் காஸா நகரம் உருக்குலைந்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இவ்வாறு இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே 13 […]

பொழுதுபோக்கு

“நாங்க அஜித் ஃபேன்ஸ் தான்… இருந்தாலும் சொல்றோம்..” லியோ சும்மா தெறிக்குது

  • October 19, 2023
  • 0 Comments

விஜய்யின் லியோ திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கைதி, விக்ரம் படங்களைத் தொடர்ந்து லியோவையும் தனது யூனிவர்ஸில் இணைத்துள்ளார் லோகேஷ். இதனால் லியோ படத்தை ரசிகர்கள் செம்மையாக என்ஜாய் செய்து வருகின்றனர். இந்நிலையில், விஜய்யின் லியோ படத்துக்கு அஜித் ரசிகர்கள் கூறிய விமர்சனம் வைரலாகி வருகிறது. தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான லியோ திரைப்படம், இன்று முதல் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தப் படத்துக்கு […]

அறிந்திருக்க வேண்டியவை

கழுகிடம் கற்றுக்கொள்ள கூடிய 5 பண்புகள்

  • October 19, 2023
  • 0 Comments

மனிதன், தான் ஆறறிவு படைத்தவன் என்றும், மற்ற உயிர்களைக் காட்டிலும் தான் தலைசிறந்தவன் என்றும் அவனே நினைத்தாலும், அவன் மற்ற உயிரினங்களைப் பார்த்தும் கற்றுக்கொள்கிறான். கற்றுக்கொள்ளும் மனிதனே வாழ்வில் வெற்றி பெறுகிறான். அப்படி மனிதன் பார்வையில் தப்பாத ஒரு பறவை கழுகு. பறவை இனங்களில் கழுகுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. அவை வாழும் விதம், பிரச்னைகளைக் கையாளும் முறை, பழக்கவழக்கங்கள் எனச் சிறந்த பண்புகளைக் கொண்டவை கழுகுகள். இதனால் மனிதனின் வாழ்க்கைக்கு இது ஒரு உந்து […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்களை குறி வைக்கும் கும்பல் – பொலிஸார் எச்சரிக்கை

  • October 19, 2023
  • 0 Comments

இலங்கையில் பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை இலக்கு வைத்து புதிய வழிமுறையில் போதைப்பொருளை விநியோகிக்கும் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகின்றது. இது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளளனர். எவரும் சந்தேகிக்காத வகையில் பேனா குழாயில் போதைப்பொருளை அடைத்து மாணவர்களிடையே விநியோகிக்கும் நடவடிக்கை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட நகரங்களை அண்மித்த பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு பேனா குழாயில் போதைப்பொருளை அடைத்து விநியோகிக்கும் செயற்பாட்டை போதைப்பொருள் வர்த்தகர்கள் ஆரம்பித்துள்ளனர்.