அறிந்திருக்க வேண்டியவை

கழுகிடம் கற்றுக்கொள்ள கூடிய 5 பண்புகள்

மனிதன், தான் ஆறறிவு படைத்தவன் என்றும், மற்ற உயிர்களைக் காட்டிலும் தான் தலைசிறந்தவன் என்றும் அவனே நினைத்தாலும், அவன் மற்ற உயிரினங்களைப் பார்த்தும் கற்றுக்கொள்கிறான். கற்றுக்கொள்ளும் மனிதனே வாழ்வில் வெற்றி பெறுகிறான்.

அப்படி மனிதன் பார்வையில் தப்பாத ஒரு பறவை கழுகு. பறவை இனங்களில் கழுகுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. அவை வாழும் விதம், பிரச்னைகளைக் கையாளும் முறை, பழக்கவழக்கங்கள் எனச் சிறந்த பண்புகளைக் கொண்டவை கழுகுகள்.

இதனால் மனிதனின் வாழ்க்கைக்கு இது ஒரு உந்து சக்தியாக இருக்கிறது. அதனால்தான் மனிதன் கழுகை ஒரு பறவை இனத்தில் மட்டும் அடக்காமல் தங்கள் வாழ்விற்கு ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொள்கிறான். அப்படிப்பட்ட கழுகிடம் கற்றுக்கொள்ள நிறையப் பழக்கங்கள் உண்டு. அவற்றுள் தலைசிறந்த ஐந்து பழக்கங்களை மட்டும் இதில் காண்போம்.

7 Qualities of an eagle every smart leader develops.

1. உயரப் பறக்கும் திறன்

கழுகு மற்ற பறவைகளைக் காட்டிலும் உயரமாகத்தான் பறக்கும். ஏனெனில் அதற்குத் தெரியும் காகம், கிளி போன்ற பறவைகளுடன் பறந்தால் தன் உயரத்தை அடைய முடியாது என்று. அதேபோல் மற்ற பறவைகளுக்குக் கழுகைப் போல் உயரப் பறக்கும் திறனோ, சக்தியோ நிச்சயம் கிடையாது. அதேபோல் நாமும் நம் எண்ணங்களை உயர்ந்ததாக வைக்க வேண்டும். உயர்ந்த எண்ணங்களை உடையவர்களுடன் பழக வேண்டும். அதை விட்டு சாதாரணமாக இருக்கும் மனிதர்களுடன் குறிக்கோள் இல்லாத மனிதர்களுடன் பழகினால் நாமும் குறிக்கோள் இல்லாதவர்களாகத்தான் இருப்போம். சாதாரணமானவர்களாகத்தான் இருப்போம். “உன் நண்பன் யார் என்று சொல்; நீ யார் என்று சொல்கிறேன்” என்ற சொலவடை நாம் கேள்விபட்டிருப்போம். உயர்ந்த எண்ணங் களுடையவருடன் பழகினால் நம் எண்ணமும் செயலும் அவர்களைப்போல் மாறும்.

The 7 Characteristics Of An Eagle And Why They Are Lessons For Good  Leadership with Prophet Christian Neshamba | by Oudney Patsika | Medium

2. கழுகு பார்வை

உயரப் பறக்கும் கழுகு 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன் இறையையும் தெளிவாகப் பார்க்கும் திறன் உடையது. அந்த இறைக்கு இடையூறாக எந்த தடைகள் வந்தாலும் அதனைத் தாண்டி தன் இறையைக் கூர்ந்து கவனிக்கும். அதேபோல் நாமும் நம் இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது எந்த தடைகள் வந்தாலும், பிரச்னைகள் வந்தாலும் அவைகளைத் தகர்த்துவிட்டு நம் பார்வை இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும்.

What You Can Learn From a Bird?. The Eagle-"The King of the Sky" | by  Pabashani Herath | Medium

3. பயம் என்ற சொல் கழுகின் அகராதியில் இல்லை

கழுகின் இறை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தாலும் அந்த இறையை அடையும் வரையில் அது போராடிக்கொண்டே இருக்கும். பயம் என்பதை சற்றும் அறியாத பறவைகளின் ராஜா இந்த கழுகு. வாழ்வில் வெற்றி பெற்ற மனிதர்கள் பலரும், தங்கள் வாழ்வில் எவ்வளவு பிரச்னை வந்தாலும், எத்தனை கஷ்டங்கள் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும், அவர்கள் இலக்கினை அடையாமல் இருக்கப் பல காரணங்கள் இருந்தாலும், அவைகளையும் மீறி வெற்றி பெற்றவர்களாக இருப்பார்கள். அந்தக் கழுகின் பயமறியா பண்பை நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

5 Positive Leadership Traits People Can Learn From Eagles | Leadership  traits, Leadership characteristics, Leadership

4. கழுகுகள் உறுதியான மனவலிமை கொண்டவை

மற்ற பறவைகள் எல்லாம் புயலோ, மழையோ வந்தால் மரத்தை அல்லது பாதுகாப்பான இடத்தை தேடிச் செல்லும். ஆனால், கழுகு அப்படி எந்த இடத்திற்கும் செல்லாது. மழையுடனும் புயலும் போராடும். அப்படிப் போராடி மேகத்தைவிட உயரமாகப் பறக்கும். வாழ்விலும் இதுபோல சிலர் நம்மையும் போராட்டத்திற்குள் சிக்க வைப்பார்கள். புயல், மழை போல் நம் வாழ்விலும் புறம் பேசுவார்கள். கேலி செய்வார்கள். அதனைப் பொறுத்துக்கொண்டு அதை ஒரு சக்தியாக மாற்றி அவர்களைவிட நம் வாழ்வில் உயரமான இடத்தை நாம் அடைய வேண்டும்.

Eagle Bird Facts - AZ Animals

5. கழுகு தன் இறையைத் தானே தேடும்

கழுகு ஒருபோதும் பிறவிலங்குகள் வேட்டையாடி இறந்துகிடக்கும் இறையை உண்ணாது. அதேபோல் தான் வேட்டையாடிய உணவு மீதி இருந்தாலும் அதையும் உண்ணாது. தனக்கான உணவை எப்போதும் தானே வேட்டையாடி உண்ணும். அதேபோல் நமக்கான வெற்றியை நாம்தான் தேட வேண்டும். வேறு யாராவது ஒருவர் நமக்கான வெற்றியைத் தேடித் தருவார் என்று ஒருபோதும் மற்றவர்களைச் சார்ந்து வாழக்கூடாது.

கழுகுகளிடமிருந்து இந்த ஐந்து பண்புகளையும் கற்றுக் கொள்ளும் மனிதன் நிச்சயம் வாழ்வில் வெற்றியை அடைவான்.

நன்றி – கல்கி

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிந்திருக்க வேண்டியவை

பூமியின் உள் மையத்தின் ரகசியம் அம்பலம்!

பூமியின் உட்புறத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்விகளுக்கான விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சி ஏற்படும்போது மேலும் ஆழமாகவும், விரிவாகவும் கேட்கபடுகிறது. கேள்விகள் கேட்பதும் அதற்கான பதிலை தேடுவதும்
அறிந்திருக்க வேண்டியவை

ChatGPTக்குப் போட்டியாக Google எடுத்த அதிரடி நடவடிக்கை

Google நிறுவனம் ChatGPTக்குப் போட்டியாக புதிய செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாகச் செயல்படும் கலந்துரையாடல் செயலியை Google அறிமுகம் செய்யவுள்ளது.

You cannot copy content of this page

Skip to content