இலங்கை

மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பான பிரேரணை குறித்து வெளியான தகவல்!

  • October 23, 2023
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக  மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில், நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சேமசிங்க சுட்டிக்காட்டினார். இதற்கமைய தற்போது மின்கட்டண முறைமையிலும் சமீபத்தில் மாற்றங்கள் […]

உலகம்

பாலஸ்தீனத்தில் ஐ.நா அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் 29 பேர் உயிரிழப்பு!

  • October 23, 2023
  • 0 Comments

இஸ்ரேலுக்கு எதிராக நடந்த தாக்குதலில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பை சேர்ந்த 29 பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான அமைப்பு தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்ட செய்தியில், “காஸாவில் இருந்த எங்களுடைய பணியாளர்கள் 29 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 50 சதவீதத்தினர் ஆசிரியர்கள் ஆவர். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். எங்கள் வேதனைகளை ஒருவருக்கொருவர் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து […]

இலங்கை

இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • October 23, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (23) காலை பதவியேற்றனர். மேலும், வைத்தியர் ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

பொழுதுபோக்கு

Birth Day Boy பிரபாஸுக்கு 230 அடி உயர கட் அவுட்

  • October 23, 2023
  • 0 Comments

பாகுபலி படம் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பிரபாஸின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஹைதராபாத்தின் குக்கட்பல்லியில் 230 அடி உயர பிரம்மாணட் கட் அவுட்டை வைத்துள்ளனர். 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஈஸ்வர் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் பிரபாஸ். 2004 ஆம் ஆண்டு வெளியான வர்ஷம் படத்தின் வெற்றியின் மூலம் தெலுங்கு சினிமாவில் அங்கீகரிக்கப் பட்ட நடிகராக உருவானார். […]

அரசியல் தமிழ்நாடு பொழுதுபோக்கு

25 வருட பயணத்திற்கு முடிவு வைத்தார் கௌதமி… இப்படி ஒரு நிலையா?

  • October 23, 2023
  • 0 Comments

பிரபல நடிகை கௌதமி பாஜகவுடனான தனது 25 ஆண்டுகால உறவை முடித்துக்கொள்வதாக கூறியுள்ளார். நடிகை கௌதமி 125க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து உள்ளார். இதில் கிடைத்த வருமானத்தை வைத்து ஸ்ரீபெரும்புதூரில், 46 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். தற்போது அந்த இடத்தின் மதிப்பு, 25 கோடி ரூபாய். குடும்ப சூழ்நிலையால் அவற்றை விற்பனை செய்து தருவதாக, கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவர், என்னிடம் உறுதி அளித்தார். ஆனால், அவர் என் நிலத்தை அபகரித்துக்கொண்டார் என கௌதமி […]

மத்திய கிழக்கு

உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம் இன்றி தவிக்கும் பாலஸ்தீனர்கள்

  • October 23, 2023
  • 0 Comments

இஸ்ரேல் தாக்குதலால் வீடுகளிலிருந்து வெளியேறி கூடாரங்களில் தங்கி உள்ள பாலஸ்தீனர்கள் உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இஸ்ரேல் வான் தாக்குதலால் வடக்கு காஸாவிலிருந்து தெற்கு காஸாவிற்கு அகதிகளாக வந்த பாலஸ்தீனர்கள், கான் யூனிஸ் நகரில் ஐ.நா. போன்ற தன்னார்வ நிறுவனங்கள் அமைத்து தந்த கூடாரங்களில் தங்கியுள்ளனர். சுமார் 35 ஆயிரம் பேர் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம், இணைய சேவைகள் போன்ற வசதிகளின்றி தவித்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். […]

இலங்கை

இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பினம் கண்டுபிடிப்பு

  • October 23, 2023
  • 0 Comments

இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘Uranotaenia Trilineata’ என அடையாளம் காணப்பட்டுள்ள இது இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள சிறிய வகை நுளம்பு இனமாகும் என பூச்சியியல் அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்தார். இவை 2-3 மில்லி மீற்றர் அளவுள்ளவை. சுமார் 108 வருடங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் இந்த நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், இவை தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் […]

பொழுதுபோக்கு

நான்கு நாட்களுக்கு 20 இலட்சம் கேட்ட நடிகை… தலை சுற்றிப்போன ஏடாகூடமான வில்லன் நடிகர்

  • October 23, 2023
  • 0 Comments

பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் ஏடாகூடமான வில்லன் நடிகர் ஒருவர் நடிகை ஒருவரை வளைத்துப்போட்டு காரியத்தை சாதித்துள்ளார். பார்பதற்கே முரட்டுத்தனமாக இருக்கும் இந்த வில்லன் நடிகர், பெண்கள் விஷயத்தில் வீக் என்பது சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அட்டகாசமான நடிப்பு திறன் இவரிடம் இருப்பதாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான வில்லன் நடிகர் என்பதாலும், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதே போல, பெண்களை எனக்கு மிகவும் பிடிக்கும் பெண்கள் விஷயத்தில் நான் அப்படி…இப்படித்தான் இருப்பேன். […]

வேலை வாய்ப்பு

சம்பத் வங்கியில் வேலைவாய்ப்பு

  • October 23, 2023
  • 0 Comments

இலங்கை முழுவதும் வியாபித்துள்ள SAMPATH BANBK ல் Trainee staff assistant வேலைவாய்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ORGANIZATION SAMPATH BANK POST Trainee staff assistant QUALIFICATION GCE AL

ஆசியா முக்கிய செய்திகள்

காசா எல்லையில் ஆபத்தான தாக்குதலுக்கு தயார் நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை

  • October 23, 2023
  • 0 Comments

தனது படைகளை இஸ்ரேல் ராணுவம் காசா எல்லையில் தரைவழித்தாக்குதலுக்குத் தயார் நிலையில் வியூகம் அமைத்து நிறுத்தி வைத்துள்ளது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐநா.சபையின் வலியுறுத்தல் காரணமாக இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஒத்தி வைக்க நேர்ந்துள்ளது. ஆயினும் இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் காசாவை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் இருதரப்பிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டால் உயிர்ச்சேதம் பல மடங்கு அதிகமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.