விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரன உலக கிண்ண போட்டியில் இருந்து விலக்கப்படவுள்ளதாக தகவல்!

  • October 23, 2023
  • 0 Comments

வேகப்பந்து வீச்சாளர் மத்திஷ பத்திரன இவ்வருட உலகக் கிண்ணத்தில் இருந்து விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவருடைய உடல் நிலையை கருத்திற் கொண்டே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, இலங்கை உலகக் கிண்ண அணியில் இருந்து மத்திஷ பத்திரனவை விடுவிக்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தொழில்நுட்பக் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திஷாவுக்கு பதிலாக மேத்யூஸ் அல்லது சமிரா அணிக்கு அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் காயமடைந்த மகிஷ் […]

ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானை சந்திக்கவுள்ள இஸ்ரேல் பிரதமர்

  • October 23, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு இடையே டெல் அவிவில் உள்ள கிரியாவில் போர் அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு ஸ்தாபன அதிகாரிகளுடன் பாதுகாப்பு மதிப்பீடு பேச்சுவார்த்தையை நெதன்யாகு நடத்தினார். இதனைத் தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்தின் தலைவர்களுடன் ஹமாஸ் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து நெதன்யாகு தொலைபேசி உரையாடல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது பயங்கரவாத குழுவின் இராணுவத்தை அழிப்பதற்கான மக்களின் உறுதியை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த நிலையில் இஸ்ரேலின் பிரதமர் அலுவலகம் தனது […]

இலங்கை

மண் சரிவில் சிக்கி உயர்தர மாணவன் பரிதமாக பலி

கொலன்னாவை, குடாலிஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் இன்று அதிகாலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் அச்லா அகலங்க தொரபனே தேசிய பாடசாலையில் உயர்தர கல்வி கற்று வருகின்றார். அப்பகுதி மக்களும் பொலிஸாரும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் எடுத்து அவரைக் கண்டுபிடித்து வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். கொலன்னாவை செயலகப் பிரிவில் உள்ள பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (22) இரவு முதல் பெய்து வரும் அடை மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை […]

இலங்கை

திருகோணமலை- காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

  • October 23, 2023
  • 0 Comments

திருகோணமலை- பட்டணமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட வெல்கம் விகாரை வனப்பகுதியில் உள்ள காணிகளை கம்பெனிகளுக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி அக்கிராம மக்கள் இன்று (23) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்து வெல்கம் விகாரை பகுதியிலுள்ள காணிகளை அபகரித்து அங்குள்ள காட்டு மரங்களை வெட்டி வேலி அமைத்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியை பொதுமக்கள் சுற்றி வளைத்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். வெல்கம் விகாரை வனப்பகுதியில் […]

இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சுற்றாடல் அமைச்சு : அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றம்!

  • October 23, 2023
  • 0 Comments

பல அமைச்சர்களின் அமைச்சுகள் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பதவி  மகிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அமைச்சர் ரமேஷ் பத்திரனவுக்கு கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெருந்தோட்ட நிறுவன அபிவிருத்திக்கான அமைச்சரவை அல்லாத அமைச்சராக திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம்

அமெரிக்க பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை!

  • October 23, 2023
  • 0 Comments

மறு அறிவிப்பு வரும் வரை ஈராக்கிற்கு செல்ல வேண்டாம் என அமெரிக்க வெளியுறவுத்துறை தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஈராக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மற்றும் குடிமக்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் பல்வேறு முரண்பட்ட காரணங்களால் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதம், கடத்தல்கள், ஆயுத மோதல்கள், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் அந்த சந்தர்ப்பங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு ஆதரவை வழங்குவதற்கு ஈராக் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக […]

ஆசியா

சீனாவில் அலுமினிய தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் பலி!

  • October 23, 2023
  • 0 Comments

சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பாய்லர் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியம் பிங்குவோ நகரில் அலுமினிய தொழிற்சாலை ஒன்று செயல்படுகிறது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அலுமினிய கம்பிகளை வெளியேற்றும் சமயத்தில் உயர் வெப்பநிலை காரணமாக பாய்லர் வெடித்து சிதறியது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.இருப்பினும் இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. […]

மத்திய கிழக்கு

ஹமாஸின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல் : 70 பேர் பலி!

  • October 23, 2023
  • 0 Comments

காசா மீது இஸ்ரேலிய படையினர் இன்று (23.10) அதிகாலை மேற்கொண்ட தாக்குதலில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் போராளிகள் தெரிவித்துள்ளனர். பாலஸ்தீனிய பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 320 இலக்குகளை குறிவைத்து தாக்கியதாக தெரிவித்துள்ளது. “ஹமாஸ் பயங்கரவாதிகள் அடங்கிய சுரங்கப்பாதைகள், டஜன் கணக்கான செயல்பாட்டு கட்டளை மையங்கள், மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகள், இராணுவ வளாகங்கள் மற்றும் கண்காணிப்பு நிலைகள் ஆகியவை தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

இனி உலகநாயகன் சம்பவம் தான்… KH 234 டைட்டில் டீசர் ரெடி

  • October 23, 2023
  • 0 Comments

உலகநாயகன் கமல்ஹாசன் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் வெறித்தனமாக கம்பேக் கொடுத்தார். இதனையடுத்து மீண்டும் இந்தியன் 2 படத்தை தொடங்கினார். கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல், பிரபாஸுடன் கல்கி படத்திலும் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் இயக்குநர் மணிரத்னம் உடன் கமல் இணையும் படம் பற்றி கடந்தாண்டு அபிஸியல் அப்டேட் வெளியானது. கமல்ஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 அப்டேட் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தது. […]

இலங்கை

கல்பிட்டியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

  • October 23, 2023
  • 0 Comments

கல்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசிரிகம தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கந்தகுளி, குறிஞ்சம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஆசிரிகம கத்தோலிக்க தேவாலயத்தின் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதற்காகச் சென்றுள்ளதுடன், இரவு உணவிற்காக தனது மனைவியின் சகோதரர் ஒருவரின் வீட்டிற்கு வந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில், மனைவியின் மற்றொரு சகோதரன் அந்த இடத்திற்கு வந்து தகராறு செய்ததாகவும், அதைத் தீர்க்க முயன்றபோது, ​​அண்ணன் கூரிய ஆயுதத்தால் அவரைக் கொன்றுள்ளதாகவும் […]