இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பினம் கண்டுபிடிப்பு
இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
‘Uranotaenia Trilineata’ என அடையாளம் காணப்பட்டுள்ள இது இலங்கையில் தற்போது பதிவாகியுள்ள சிறிய வகை நுளம்பு இனமாகும் என பூச்சியியல் அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவித்தார்.
இவை 2-3 மில்லி மீற்றர் அளவுள்ளவை. சுமார் 108 வருடங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் இந்த நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர், இவை தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
(Visited 14 times, 1 visits today)