பொழுதுபோக்கு

ஷாருக்கானின் பிறந்தநாள் ட்ரீட்.. இனி கொண்டாட்டம்தான்

  • November 2, 2023
  • 0 Comments

ஷாருக்கானின் 58ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜவான் திரைப்படம் ரிலீஸாகியிருக்கிறது. அட்லீ முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன் தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார். ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என […]

இலங்கை

வங்கதேசத்தின் நிலவும் அரசியல் பிரச்சினை மோதலாக உருவெடுத்துள்ளது!

  • November 2, 2023
  • 0 Comments

பல வாரங்களாக வங்கதேசத்தில் நிலவி வந்த சூடான அரசியல் சூழல் தற்போது மோதல்களாக உருவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் அரசியல் நெருக்கடி உருவாகி வருவதாகத் தோன்றுவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பல பிரதான எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் சனிக்கிழமையன்று அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பேரணி மோதலில் முடிந்தது. இரண்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இதன்போது உயிரிழந்தனர். நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவை […]

ஆசியா

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

  • November 2, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் திமோர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று (02.11) பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் (6.21 மைல்) ஆழத்தில் இருந்ததாக EMSC தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் வெளியாகவில்லை.

இலங்கை

காஸாவில் உள்ள 17 இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

  • November 2, 2023
  • 0 Comments

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் காஸா பகுதியில் சிக்கியுள்ள 17 இலங்கையர்களைக் கொண்ட குழு, போரினால் பாதிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதியை விட்டு வெளியேறி ரஃபா எல்லைக் கடவை வழியாக எகிப்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) உத்தியோகபூர்வமாக அறிவித்தது. அந்த வகையில், இவர்களில் 15 இலங்கையர்கள் இன்று பிற்பகல் எகிப்தை சென்றடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக SLBFE ஊடகப் பேச்சாளர் காமினி செனரத் இன்று (02.11) […]

இந்தியா

புருவத்தை திருத்தம் செய்த மனைவி… போனில் தலாக் சொன்ன கணவன்!

  • November 2, 2023
  • 0 Comments

உத்தரப்பிரதேசத்தில் புருவத்தை திருத்திய இளம்பெண்ணுக்கு அவரது கணவர் போனில் தலாக் கூறிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பாட்ஷாஹி நகரைச் சேர்ந்த இளம்பெண், கடந்த 2022ம் ஆண்டு பிரயக்ராஜைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் சவுதி அரேபியாவில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அந்த இளம்பெண் அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், அக்.4ம் திகதி கான்பூரில் உள்ள […]

இலங்கை

கொழுப்பில் நடைபெற்ற இலங்கைஇந்தியாவுக்கிடையிலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தை

  • November 2, 2023
  • 0 Comments

2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ம் திகதி முதல் நவம்பர் 1ம் திகதி வரை கொழும்பில் நடைபெற்றது. இதில் நாட்டின் பிரதான ஏற்றுமதிச் சந்தைகளைப் பாதுகாத்து ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதி பல்வகைப்படுத்தலுக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிலுள்ள மிகப்பெரிய பொருளாதாரங்களுடன் இணைவதே இலங்கை அரசாங்கத்தின் நோக்கமாகும். இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தி மக்களின் […]

மத்திய கிழக்கு

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்குமாறு ஈரான் வலியுறுத்தல்

  • November 2, 2023
  • 0 Comments

இஸ்ரேலுடனான வர்த்தக உறவை துண்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் நாட்டின் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். எண்ணெய் ஏற்றுமதி உட்பட இஸ்ரேலுடனான வர்த்தகத்தை துண்டிக்குமாறு அவர் தெரிவித்தார். காசா மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல் காரணமாக ஈரான் தரப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. “காசாவில் நடந்து வரும் இன அழிப்பை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் விரைந்து வலியுறுத்த வேண்டும். இஸ்லாமிய நாடுகள், சியோனிச ஆட்சி நடக்கும் இஸ்ரேலுடன் […]

பொழுதுபோக்கு

நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்

  • November 2, 2023
  • 0 Comments

மூத்த நடிகரான ஜூனியர் பாலையா இன்று காலை தனது இல்லத்தில் உயிரிழந்தார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக இருந்த பாலையாவின் மூன்றாவது மகன் ஜூனியர் பாலையா. தனது தந்தை போலவே உருவ அமைப்பு கொண்ட அவர் 1975ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பாலையா எப்படி தனது தனித்துவமான உடல்மொழி, குரல் மொழி ஆகியவற்றை கொண்டிருந்தாரோ அதேபோல் ஜூனியர் பாலையாவும் கொண்டிருந்தார். ஜூனியர் பாலையா நடித்த படங்களில் கரகாட்டக்காரன் திரைப்படம் அவருக்கான […]

பொழுதுபோக்கு

இத்தாலியில் பிரம்மாண்ட திருமணம் – படையெடுத்த தெலுங்கு நடிகர் கூட்டம்…

  • November 2, 2023
  • 0 Comments

தெலுங்கு நடிகர் வருண் தேஜ் மற்றும் நடிகை லாவண்யா திரிபாதியின் திருமணம் இத்தாலியில் பிரம்மாண்டமாக நேற்று இரவு நடைபெற்ற நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் சிரஞ்சீவியின் உறவினர் திருமணம் என்பதால் நடிகர்கள் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம்சரண் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டோலிவுட்டின் ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். அவர்களுடன் மண மக்கள் அழகாக தரையில் அமர்ந்துக் கொண்டு எடுத்த புகைப்படம் மற்றும் திருமண புகைப்படங்கள் தற்போது ஷேர் […]

உலகம் முக்கிய செய்திகள்

இந்தோனேசியாவை உலுக்கிய நிலநடுக்கம் – இடிந்து விழுந்த கட்டிடங்கள்

  • November 2, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் திமோர் பகுதியில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, திமோர்-லெஸ்டேவில் பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. எப்படியிருப்பினும் இதுவரையில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.