காஸா பகுதியில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் – விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு
காஸா பகுதியில் 17 இலங்கையர்கள் சிக்கியிருந்ததாக தெரியவந்துள்ளது. அவர்கள் ரஃபா நுழைவாயில் ஊடாக எகிப்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் காமினி செனரத் யாப்பா, தூதரகம் ஊடாக இது குறித்து அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார். அதன்படி, இந்தக் குழுவைச் சேர்ந்த சுமார் 15 பேர் இன்று மதியம் 12 மணிக்குள் எகிப்தை அடைய உள்ளனர். இதற்குத் தேவையான பணிகளை எகிப்து […]













