இலங்கை

மக்களே அவதானம் : தீவிரமடையும் டெங்கு பாதிப்பு

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 69,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கு நவம்பர் 04 ஆம் திகதி வரை, மொத்தம் 69,231 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் அதிகபட்சமாக கொழும்பு மாவட்டத்தில் 14,634 வழக்குகள் பதிவாகியுள்ளன. மேல் மாகாணத்தில் 33,139 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மாகாண வாரியாக அதிகபட்சமாக உள்ளது. அக்டோபர் மாதத்தில் 4,010 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன, நவம்பரில் இதுவரை 738 ஆக உள்ளது. மேலும், கடந்த ஏழு […]

பொழுதுபோக்கு

கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் டிரைலர்… சும்மா மெரட்டலா இருக்கு…

  • November 4, 2023
  • 0 Comments

நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வருபவர் நடிகர் சதிஷ். இவருக்கு திருமணம் ஆகி அழகிய பெண் குழந்தை உள்ளது. முதலில் நகைச்சுவை நடிகர்களாக சினிமா பயணத்தை ஆரம்பித்த பலர் தற்போது ஹீரோக்களாக மாறியுள்ளனர். நடிகர்களான சந்தானம், சூரி, யோகிபாபு போன்றவர்களின் வரிசையில் தற்போது நடிகர் சதிஷ் இணைந்துள்ளார். தற்போது சதிஷ் ஹீரோவாக சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அண்மையில் இவர் கதாநாயகனாக நடித்து வெளியாகிய நாய் சேகர் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. […]

விளையாட்டு

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று!

  • November 4, 2023
  • 0 Comments

2023 உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கீழ் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று (04.11) நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 401 ஓட்டங்களைப் பெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்காக 402 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலகம்

நியூயோர்கில் எரிவாயு வெடித்து விபத்து: 10 பேர் வைத்தியசாலையில்!

  • November 4, 2023
  • 0 Comments

நியூயோர்க் நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஒரு கட்டிடத் தொகுதி இடிந்து விழுந்ததில் 10 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எரிவாயு வெடிப்பினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கட்டத்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர் துரித கதியில் செயற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எரிவாயு வெடிப்பினால் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட 08 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு எவ்வாறு வெடித்தது என்பது குறித்த விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு

அமெரிக்கா நிச்சயம் அழிந்துபோகும்; நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ள ஹமாஸ் !

  • November 4, 2023
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையேயான சண்டை தொடரும் நிலையில், ஹமாஸின் மூத்த தளபதி ஒருவர் நேரடியாக அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் 7ம் திகதி இஸ்ரேலைக் குறிவைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலை நடத்தினர். முதலில் 20 நிமிடங்களில் பல ஆயிரம் ஏவுகணைகளை வீசிய அவர்கள், தொடர்ந்து இஸ்ரேலுக்குள் நுழைந்தும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர். இதில் பலர் உயிரிழந்தனர்.இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இறங்கியது. காசா மீது தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும், […]

இலங்கை

இலங்கை கிரிகெட் அணியின் தொடர் தோல்விகளுக்கு யார் பொறுப்பு?

  • November 4, 2023
  • 0 Comments

கிரிக்கெட் அணியின் தோல்விக்கு இலங்கை கிரிக்கெட் சபையும் கிரிக்கெட் தெரிவுக்குழுவும் பொறுப்பேற்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க அறிவித்துள்ளார். உலகக்கிண்ண போட்டியில் இந்தியாவைிற்கு எதிராக விளையாடியபோது இலங்கை அணி தோல்வியடைந்தது. இது இரசிகர்கள் மத்தியில் இலங்கை அணியின் எதிர்காலம் குறித்த கவலையை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க வெளியிட்டுள்ள அறிக்யைில்,   இலங்கை அணியின் தொடர் தோல்விகளால் கிரிக்கெட்டை நேசிக்கும் அனைவரும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்குப் பொறுப்பானவர்கள் […]

இந்தியா

பார்ட்டிகளில் போதைக்காக பாம்பு விஷம் : சிக்கிய பிக்பாஸ் வெற்றியாளர்!

  • November 4, 2023
  • 0 Comments

இந்தியில் பிரபல youtuber ஆக திகழ்பவர் எல்விஷ் யாதவ் (Elvish Yadav). இதன் மூலம் பிரபலமான இவர், பிக் பாஸ் ஓடிடி 2-வது சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். அதோடு சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்த ஷோவில் வெற்றியாளராகவும் ஆனார். இந்த சூழலில் இவர் பாம்பு விஷத்தை போதைக்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில், இவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரில் தனியார் பார்ட்டி […]

இலங்கை

பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில், மீளவும் அதிகரிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு பொருட்கள்!

  • November 4, 2023
  • 0 Comments

சீனிக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை முழுவதிலும் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக அரசாங்கத்தால் நடத்தப்படும் சதொசவிலும் சீனியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையானது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலையை விதிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (04.11) இரவு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 275 ரூபாவாகவும், பொதி செய்யப்படாத ப்ரவுண் […]

பொழுதுபோக்கு

2023இல் அதிக லாபம் ஈட்டிய 7 இந்திய படங்கள்.. 3 தமிழ் படங்களும் இருக்கு….

  • November 4, 2023
  • 0 Comments

ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான திரைப்படங்களே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் போதிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக மாறுகின்றன. அந்த வகையில் 2023-ல் இந்திய அளவில் லாபகரமான 7 படங்கள் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. இந்த 7 படங்களில் 3 தமிழ் படங்கள் என்பது கூடுதல் சிறப்பு. பொன்னியின் செல்வன் பாகம் பொன்னியின் செல்வன் பாகம் 1-ன் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியானது. […]

இலங்கை

சனத்தொகை கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஒதுங்கி இருப்போம் : கிராமசேவையாளர்கள் அறிவிப்பு!

  • November 4, 2023
  • 0 Comments

தமக்கு உரிய கொடுப்பனவு வழங்கப்படும் வரை சனத்தொகை கணக்கெடுப்பு பணிகளில் இருந்து விலகி இருப்போம் என அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், கொடுப்பனவுகள் வழங்குவதில் அதிகாரிகளும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையும் தன்னிச்சையாகச் செயற்படுவதாக சங்கத்தின் பொதுச் செயலாளர்  ஜெகத் சந்திரலால் குற்றம் சாட்டியுள்ளார். சனத்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படைக் கட்டமான வரைபடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.