ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்த திட்டம் – அமெரிக்க கருவூலச் செயலாளர் அறிவிப்பு
உலகம் இதுவரை கண்டிராத வகையில்” ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்துவோம் என்று அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இது, உலகம் இதுவரை கண்டிராத வகையில், பொருளாதார ரீதியான தனிமைப்படுத்தலின் ஒரு கலவையாக இருக்கும் என்றும், ஹோர்முஸ் ஜலசந்தியில் தொடரும் முற்றுகை, ஈரானிய துறைமுகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் எதுவும் செல்வதைத் தடுக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த வாரம் புதிய நடவடிக்கைகள் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறினார்.
நிதி அழுத்தம் மற்றும் துறைமுகங்களின் நேரடி முற்றுகை ஆகியவற்றை உள்ளடக்கிய இருமுனை அணுகுமுறையை பெசென்ட் விவரித்தார்.
இதேவேளை ஈரான் போரில் அமெரிக்கர்களுக்கான எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலைகளைக் குறைப்பதே அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை என்றும், தெஹ்ரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பது தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது என்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் முன்னதாகக் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





