தமிழ்நாடு

‘அவர் விளையாட்டாக சொல்லி இருப்பார்’; மன்சூர் அலிக்கானுக்கு சீமான் ஆதரவு

  • November 22, 2023
  • 0 Comments

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் விளையாட்டாக சொல்லியிருப்பார் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த சீமானிடன், மன்சூர் அலிகான் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மன்சூர் அலிகானை எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் என்னுடைய கட்சியில் நின்று போட்டியிட்டுள்ளார்.அவர் த்ரிஷா குறித்து வேண்டுமென்றே சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை. அவர், நகைச்சுவையாக, விளையாட்டாக சொல்லியிருக்கலாம். அவர், ஒரு உணர்வுமிக்க தமிழர். […]

மத்திய கிழக்கு

காங்கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் பலி!

  • November 22, 2023
  • 0 Comments

காங்கோ-பிரஸ்ஸாவில்லில் உள்ள மைதானத்தில் இராணுவ ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் உயிரிழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. தலைநகர் பிரஸ்ஸாவில்லில் உள்ள மைதானத்தின் வாயில்கள் வழியாக சிலர் வலுக்கட்டாயமாக செல்ல முயன்றதால், நெரிசல் ஏற்பட்டது என்று குடியிருப்பாளர்கள் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரம், 18 முதல் 25 வயதுக்குட்பட்ட சுமார் 1,500 பேரை பணியில் சேர்ப்பதற்கான திட்டத்தை இராணுவம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை

நாவலப்பிட்டியில் லஞ்ச் ஷீட்​டை சாப்பிட வைத்த அதிபர்: இரு மாணவர்களுக்கு பாதிப்பு

  • November 22, 2023
  • 0 Comments

மதிய உணவை லஞ்ச் ஷீட் சுற்றிக்கொண்டு வந்த மாணவர்களில் ஏழுபேரை பிடித்த பாடசாலையின் அதிபரொருவர், அந்த லஞ்ச் ஷீட்டை உட்கொள்ளுமாறு கூறியமையால், அதனை உட்கொண்ட இரண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம்,நாவலப்பிட்டி வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் இயங்கும் கல்லூரி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.பாதிப்பு உள்ளான மாணவர்கள் இருவரும் நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த கல்லூரியில் 11ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மதிய உணவை லஞ்ச் ஷீட்டில் சுற்றி, செய்தித்தாளில் சுற்றிக்கொண்டு வந்துள்ளனர்.அந்த வகுப்பில் 33 மாணவர்கள் […]

தென் அமெரிக்கா

மம்மியாக்கம் செய்யப்பட்ட குழந்தைகள்… பெரு அகழாய்வில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய ‘மம்மிகள்’ கண்டெடுப்பு

  • November 22, 2023
  • 0 Comments

பெரு தேசத்தின் தலைநகரான லிமாவில் குடியிருப்பு பகுதிகளின் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வரும் உலகின் மிகப்பெரும் அகழாய்வில், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய மம்மிக்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் 4 குழந்தைகள் உட்பட 5 மம்மிக்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. புகழ் பெற்ற இன்காக்கள் பெருவிற்கு வருவதற்கு முன்பான மறுசீரமைப்பு காலத்தில் உருவான கலாச்சாரத்தின் பின்னணியில், மம்மிகள் அடையாளம் காணப்படும் பிராந்தியம் விளங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பண்டைய பெருவியர்களின் கலாச்சார மற்றும் சமூக பின்னணியை ஆராயும் […]

இலங்கை

தேர்தல் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி ரணில் வெளியிட்ட அறிவிப்பு!

  • November 22, 2023
  • 0 Comments

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (22.11) பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி. எதிராக வாக்களித்தவர்களுக்கு நன்றி. அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல் இரண்டையும் நடத்துவேன். அதன் பிறகு மற்ற தேர்தல்களை நடத்துவேன்.”எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கை

கொக்குதொடுவாய் மனித புதைகுழி 3ம் நாள் அகழ்வு பணி; இதுவரை 19 எலும்புகூட்டு தொகுதிகள் மீட்பு

  • November 22, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு பணியானது மீள ஆரம்பிக்கப்பட்டு இன்றையதினம் (22) மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதன் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தடயவியல் பொலிசார், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. நேற்றையதினம் அகழ்வாய்வு நிறைவடையும் போது இரு மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் […]

இலங்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை : கொழும்பு செல்லும் மக்களுக்கு விசேட அறிவிப்பு!

  • November 22, 2023
  • 0 Comments

பதுளை – கொழும்பு பிரதான வீதி சீலகம பிரதேசத்தில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வீதியில் பாரிய கல் ஒன்று வீழ்ந்துள்ளமையினால் வீதி போக்குவரத்துக்கு திறப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே கொழும்பு செல்லும் மக்கள் சீலகம பகுதியில் இருந்து இறங்கி மறுபுறம் சென்று அங்கு நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகளில் ஏறி கொழும்பு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கையின் பல இடங்களில் கொட்டித்தீர்க்கும் மழை : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • November 22, 2023
  • 0 Comments

இலங்கையின் பல இடங்களில் இன்று (22.11) மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி மத்திய, சப்ரகமுவ, மேற்கு, வடமேற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய […]

ஐரோப்பா

மரத்திலிருந்து கொட்டும் நீரூற்று… கிராமத்தில் தொடரும் அதிசயம்!- வைரலான வீடியோ

  • November 22, 2023
  • 0 Comments

தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு கிராமத்தில் 150 வருட பழமையான மரத்திலிருந்து நீரூற்று மூலம் தண்ணீர் வெளியேறி வருவது உலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மொண்டினீக்ரோவில் உள்ள டைனோசா கிராமத்தில் இந்த மல்பெரி மரம் உள்ளது. இந்த மரத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட சில மாதங்களில் நீரூற்று வெளிப்படுகிறது. அப்போது மரத்தின் துளையிலிருந்து நீரூற்று பீய்ச்சி அடிக்கிறது. இந்த ஆண்டு தற்போது அந்த நிகழ்வு நடக்கத் தொடங்கியுள்ளது. சயின்ஸ் கேர்ள் என்ற ட்விட்டர் கணக்கில் இதுகுறித்த […]

உலகம்

வடக்கு வனுவாட்டுவில் நிலநடுக்கம் பதிவு : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

  • November 22, 2023
  • 0 Comments

வடக்கு வனுவாட்டுவில் இன்று (22.11)  6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதிகாரிகள் , கடல் கண்காணிப்பு கருவிகளால் “சிறிய சுனாமி அலைகள்” உருவாகியுள்ளதாக  எச்சரித்துள்ளனர். நிலநடுக்கம் 22 கிலோமீட்டர் (14 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர வனுவாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள் “கவனமாக இருக்க வேண்டும் என்றும், சாதாரண எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றும்  பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் […]