மத்திய கிழக்கு

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 39 பலஸ்தீன கைதிகள் விடுவிப்பு!

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்திற்கு இணையாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 39 பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பணயக்கைதிகள் பரிமாற்றத்தின் மூன்றாம் நாளில் இந்த பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

13 இஸ்ரேலிய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ததன் எதிரொலியாகவே இந்த குழு விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நேற்று (26.11) ஹமாஸால் விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதிகள் குழு தற்போது இஸ்ரேலை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, நான்கு நாள் போர் நிறுத்தத்தின் போது 50 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய உள்ளது. அதற்கு பதிலாக, 150 பாலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.

மேலும் மனிதாபிமான உதவிகளும் தற்போது காசா பகுதிக்குள் சென்றடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அறிவிக்கப்பட்ட தற்காலிக போர்நிறுத்தத்தின் இரண்டாம் நாள் முடிவில், காசா பகுதியில் பிடிபட்டிருந்த 41 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

VD

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.