ஜப்பான் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான அமெரிக்க ராணுவ விமானம்
எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம் இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது. அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் செயல்படக்கூடியது. இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர […]













