ஆசியா

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் 4.1 ரிக்டரில் உணரப்பட்ட நிலநடுக்கம்

  • December 13, 2023
  • 0 Comments

சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சீனாவின் சின்ஜியாங் பகுதியில் இன்று அதிகாலை 5.35 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 170 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட […]

இலங்கை

இலங்கையின் 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

  • December 13, 2023
  • 0 Comments

புத்தளம், நாத்தாண்டி, குருணாகல், பதுளை மற்றும் ஹாலி-எல ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதனைத் தவிர கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களிலும் டெங்கு அபாயம் மேலும் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்திய அதிகாரி அஷானி ஹேவகே குறிப்பிட்டார். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் 80222 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.  

ஆசியா

மலேசியாவில் 112 வயதில் 8வது முறையாக திருமணம் செய்துக் கொள்ள விரும்பும் பாட்டி

  • December 13, 2023
  • 0 Comments

மலேசியாவை சேர்ந்த 112 வயதுப் பாட்டி ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்வதில் தமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்துள்ளார் ஏற்கனவே 7 மூறை திருமணம் செய்திருக்கும் சித்தி ஹவ்வா ஹுஸினுக்கு 4 பிள்ளைகள், 19 பேரப் பிள்ளைகள், 30 கொள்ளுப் பேரப்பிள்ளைகள். இப்போதும் வரன் வந்தால் நிராகரிக்கப்போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர், தமது கணவர்களில் சிலர் காலமாகிவிட்டதாகும் சிலரை விவாகரத்துச் செய்ததாகவும் கூறினார். சித்தி ஹவ்வா தமது ஆக இளைய […]

பொழுதுபோக்கு

KGF புகழ் யஷ் படத்தில் ஷ்ருதி ஹாசன்…

  • December 13, 2023
  • 0 Comments

மலையாளத்தில், ‘லையர்ஸ் டைஸ்’ ,’மூத்தோன்’ ஆகிய படங்களை இயக்கியவர் கீது மோகன்தாஸ். நடிகையான இவர் இயக்குநராக அறிமுகமாகி பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் கணவர் ராஜீவ் ரவியும் சிறந்த இயக்குநராக அறியப்படுகிறார். நடிகர் யஷ் இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் தன் 19-வது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து, இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி, யஷ் 19-வது படத்துக்கு டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் […]

செய்தி

இலங்கையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வெளியான தகவல்!

  • December 13, 2023
  • 0 Comments

இலங்கையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறித்த கோழிக்குஞ்சுகளை இலவசமாக பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. பன்றிகளுக்கு உணவளிப்பதற்காக வளர்க்கப்படும் 50 ஆயிரம் கோழிக் குஞ்சுகளை, இறைச்சிக்கான கோழி வளர்ப்பில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர்களிடையே பகிர்ந்தளிப்பதற்கு தேசிய கால்நடை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு குறித்த கோழிக்குஞ்சுகளை இலவசமாக பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இதேவேளை, முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நாட்டுக் கோழிகளை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டமொன்றை தேசிய ஹதபிம அதிகாரசபை முன்னெடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், […]

கருத்து & பகுப்பாய்வு

மன்னிப்பின் மகத்துவம் மேலானது!

  • December 13, 2023
  • 0 Comments

“தவறு செய்துவிட்டால் மன்னிப்பு கேளுங்கள்”; “மன்னிப்பு கேட்கிறவன் மனிதன், மன்னிப்பவன் மாமனிதன்” இதுபோன்ற எத்தனையோ மன்னிப்பு தத்துவங்களை அறிவுரையாக நாம் அன்றாடம் கேட்டுவருகிறோம். உண்மைத்தான்! நாம் ஏதாவது தவறு செய்தால் மன்னிப்பு கேட்க வேண்டும். எதிரே இருப்பவர்கள் மன்னிப்பு வழங்குவதும் அவசியம். மன்னிப்பு கேட்பவர்களுக்கு ஒரு தயக்கம் ஏற்படுகிறது என்றால் அதற்கு அவர்களின் குற்ற உணர்வு ஒரு முக்கிய காரணம். ஆனால், அவர்களை எப்போதும் ஈகோ பிடித்தவர்கள் என்றுத்தான் முக்கால்வாசி பேர் தவறாக நினைத்துக்கொண்டு அவர்களை வெறுக்கிறார்கள். […]

செய்தி

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • December 13, 2023
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.73 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.24 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.27 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் வாடகை வீட்டு நெருக்கடியால் பலர் ஆபத்தில்!

  • December 13, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியா முழுவதும் 640,000 குடும்பங்கள் கட்டுப்படியாகாத வாடகை வீட்டு நெருக்கடியால் ஆபத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கேற்ப, வாழ்க்கைச் செலவு அதிகமாக உள்ள நிலையில், மக்கள் மாற்றுக் குடியிருப்புகளை நோக்கி செல்லும் நிலை உள்ளது. நிதி நெருக்கடியால் மக்கள் கார்களில் உறங்குவதற்கும், பூங்காக்களில் முகாமிட்டு, நண்பர்களின் வீடுகளில் படுக்கைகளில் இருப்பதற்கும் வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது. வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு வாடகை வீடுகளை வாங்குவதற்குப் போதிய பணமில்லாதது நாட்டில் பாரியதொரு பிரச்சினையாக இருப்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய இன்ஸ்டிடியூட் […]

வாழ்வியல்

எந்த ஒரு செயலையும் தள்ளிப்போடும் பழக்கத்தை கொண்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • December 13, 2023
  • 0 Comments

வாழ்க்கையில் எந்த ஒரு செயலையும் தள்ளிப் போடும் பழக்கத்தை இன்று தள்ளி விடுங்கள். வாழ்க்கையில் அது உங்களை அடுத்த கட்டத்திற்கு தள்ளிவிடும். நீங்கள் சோம்பேறித்தனமாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலையும் தள்ளிப்போடு பழக்கம் உருவாகும். இந்த பதிவில் கூறப்பட்டுள்ள ஏதாவது ஒன்று உங்களிடம் இருந்தால் நிச்சயம் இந்த பழக்கம் ஏற்படும். 1. என்ன செய்வது என தெரியாமல் இருப்பது தள்ளி போடும் பழக்கத்திற்கு காரணமாக இருக்கும். உங்களுக்கென்று ஒரு இலக்கு இருக்க வேண்டும். அது வெறும் […]

இலங்கை

இலங்கைக்கான இரண்டாவது கடன் தவணைக்கு IMF அனுமதி

  • December 13, 2023
  • 0 Comments

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான இரண்டாவது தவணையான 337 மில்லியன் டொலர்களை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சர்வதேச நாணய நிதிய சபைக் கூட்டத்தில் இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அது தொடர்பான உறுதிப்படுத்தல் வேலைத்திட்டத்தின் முதலாவது மீளாய்வை முடித்துக்கொண்டு இதனை வெளியிட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மதிப்பாய்வில், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, அரசாங்க வருவாயை அதிகரிப்பது, வெளிநாட்டு இருப்புக்களை அதிகரிப்பது, பணவீக்கத்தைக் குறைப்பது மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் அதிகாரிகள் ஆற்றிய […]

error: Content is protected !!