இந்தியா இலங்கை செய்தி

இலங்கைக்கு 100 நவீன ஆம்புலன்ஸ்கள்: நிதியுதவி வழங்க இந்தியா இணக்கம்

இலங்கையின் 1990 சுவசெரிய தேசிய அவசர ஆம்புலன்ஸ் சேவைக்காக, முழுமையான மருத்துவ வசதிகளைக் கொண்ட 100 புதிய ஆம்புலன்ஸ்களை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையின் 1990 சுவசெரிய தேசிய அவசர ஆம்புலன்ஸ் சேவைக்காக, முழுமையான மருத்துவ வசதிகளைக் கொண்ட 100 புதிய ஆம்புலன்ஸ்களை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்காக இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1990 சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை, 2018ஆம் ஆண்டளவில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்பட்டது.

இலவசமாக முன்னெடுக்கப்படும் இந்த அவசர ஆம்புலன்ஸ் சேவை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 24 மணி நேரமும் செயற்பட்டு வருகிறது. இதன்மூலம் நாளாந்தம் சுமார் 1,000 முதல் 1,200 வரையிலான அவசர நோயாளர் போக்குவரத்துச் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போது இச்சேவையில் 322 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஆண்டுதோறும் சுமார் 90 இலட்சம் கிலோமீற்றர் தூரம் பயணிப்பதால், வாகனங்களில் இயந்திரக் கோளாறுகள் மற்றும் தேய்மானங்கள் அதிகரித்து வருவதாக அமைச்சரவை முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு, நவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய 100 ஆம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கு நிதியுதவி வழங்குமாறு இலங்கை அரசாங்கம் இந்தியாவிடம் விசேட கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்கமைய, குறித்த ஆம்புலன்ஸ்களைக் கொள்வனவு செய்வதற்கான நிதியுதவியை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை