இலங்கை

அனுராதபுரத்தில் கோர விபத்து – தாயும் மகளும் ஸ்தலத்திலேயே பலி!

  • August 21, 2023
  • 0 Comments

அனுராதபுரத்தில் இன்று (21.08)இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். ராஜாங்கனை பிரதேசத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணிப்புரியும்,  36 வயதுடைய பெண்ணும் அவரது 8 வயது மகளுமே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். பேருந்தை  முந்திச் செல்ல முற்பட்ட போது பின்னால் வந்த டிப்பர் ரக வாகனம் ஸ்கூட்டருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்த பணியாளர்கள் விபத்துக்குள்ளான ஸ்கூட்டரில் பயணித்த தாய் மற்றும் மகளை மருத்துவமனையில் […]

இலங்கை

இலங்கை பணவீக்கத்தின் தற்போதைய நிலை!

  • August 21, 2023
  • 0 Comments

தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின்படி, ஜூலை மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 4.6 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 10.8% என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், உணவு வகைக்கான பணவீக்கம் -2.5% ஆக குறைந்தது.

பொழுதுபோக்கு

விஜய்யின் முகத்திரையை கிழித்த விநியோகஸ்தர்.. திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பு

  • August 21, 2023
  • 0 Comments

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வாரிசு திரைப்படம் கடந்த பொங்கலையொட்டி வெளியானது. தமிழ், தெலுங்கில் வெளியான இப்படம், ஒட்டு மொத்தமாக ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளிவந்தன. குறிப்பாக கேரளாவில் 13 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கேரளாவில் இந்த படத்தை விநியோகம் செய்த ராய் அகஸ்டின் என்பவர், தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், படத்துக்கு தான் கொடுத்த கூடுதல் அட்வான்ஸ் […]

இலங்கை

சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமைாவை சந்தித்தார் ரணில்!

  • August 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டின் ஜனாதிபதியான ஹலிமா யாக்கோப்புடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். சிங்கப்பூருக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இன்று (21.08) முற்பகல் அந்நாட்டு ஜனாதிபதியை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், பாதுகாப்பு அமைச்சர் நெங் எங் ஹென் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ ஹை யென் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு […]

பொழுதுபோக்கு

கவினுக்கு கல்யாணம் முடிஞ்சிரிச்சி.. லாஸ்லியா போட்ட வைரல் பதிவு

  • August 21, 2023
  • 0 Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமான கவின் சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்தத் தொடர் அவருக்கு பெரும் புகழும் பெற்று தந்த நிலையில் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இலங்கை தொகுப்பாளரான லாஸ்லியாவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இருவருக்கும் இடையில் காதல் மலரத் தொடங்கியது. பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த லாஸ்லியாவின் தந்தையும் சற்று கோபமாகவே நடந்து கொண்டார். மேலும் பிக் பாஸ் […]

இலங்கை

ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

  • August 21, 2023
  • 0 Comments

முறையான அனுமதிப்பத்திரம் இன்றி ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 83 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த நபர் ஒருவரை  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கைது செய்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 16ஆம் திகதி குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இராஜகிரிய, கலப்பலுவாவ, புட்கமுவ வீதியைச் சேர்ந்த சலாஹுதீன் மொஹமட் நவஸ்தீன் என்ற சந்தேக நபர் ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி 813,000 ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும், […]

செய்தி

முல்லைத்தீவில் தமிழர்களின் படகுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

  • August 21, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 4 படகுகள் நேற்று (20) இரவு இனந்தெரியாத நபர்களால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியை சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பும் தண்ணிமுறிப்பு குள பகுதியில் வைத்து 6 படகுகள் தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இவ்வாறு மீனவர்களின் படகுகள் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட […]

இலங்கை

குருந்தூர் மலையில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு!

  • August 21, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்ட பொங்கல் நிகழ்வில் பக்தர்களுக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொண்டு பொங்கல் பண்டிகையை ஏற்பாடு செய்ததாகவும், இந்து மக்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள பௌத்த சக்திகள் செயற்பட்டதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 18ம் திகதி குருந்தி கோவில் அருகே பொங்கல் நிகழ்வு நடபெற்ற போது, சிங்களவர்கள் ஆசி வழங்கும் நிகழ்ச்சி நடத்த சென்றதால், இரு பிரிவினரிடையே […]

இலங்கை

யாழில் குடும்பஸ்தரின் உயிரை பறித்த விபத்து

  • August 21, 2023
  • 0 Comments

புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுதியில் 19 அன்றைய தினம் இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து பந்தன் நோக்கி பயணித்த டிப்பர் வாகனமும் பரந்தன் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதியதில் பரந்தன் உமையாள்புரம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் நகுலேஸ்வரன் 47 வயதுடைய நபர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி நேற்று (20) உயிரிழந்துள்ளார் […]

இலங்கை

04 கடவுச்சீட்டுக்களுடன் பெண் ஒருவர் கைது!

  • August 21, 2023
  • 0 Comments

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். குறித்த பெண்ணின் உடைமையில் நான்கு கடவுச்சீட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளானர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்,   புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த 48 வயதான வர்த்தக பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இன்று (21.08) அதிகாலை 04.41 மணியளவில் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தடைந்தார். சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்வதற்காக குறித்த […]