இலங்கை

04 கடவுச்சீட்டுக்களுடன் பெண் ஒருவர் கைது!

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள், பெண் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்ணின் உடைமையில் நான்கு கடவுச்சீட்டுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளானர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்,   புத்தளம் கல்பிட்டி பகுதியை சேர்ந்த 48 வயதான வர்த்தக பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் இன்று (21.08) அதிகாலை 04.41 மணியளவில் சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்தடைந்தார்.

சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்வதற்காக குறித்த பெண் கடவுச்சீட்டுகளை மனித கடத்தல்காரர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 04 கடவுச்சீட்டுகளுடன், BIA இன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்