ரத்வத்தை விவகாரம்: சபையில் கலகம்
இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாத்தளை-எல்கடுவ ரத்வத்தை உள்ள அரச தோட்டமொன்றைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரை தோட்ட பிரதி முகாமையாளர் விரட்டி விரட்டி பீதியை கிளப்பி அவர்களின் வீடுகளை இடித்த சம்பவம் காரணமாக பாராளுமன்றத்தில் கடும் அமளி செவ்வாய்க்கிழமை (22) […]













