மருந்தகம் ஒன்றில் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட இளைஞர்: ஜேர்மன் பொலிஸாரின் அதிரடி
ஜேர்மன் நகரமொன்றில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினுள் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்ட இளைஞர் ஒருவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளார்கள். நேற்று மாலை 4.30 மணியளவில், தென்மேற்கு ஜேர்மனியிலுள்ள Karlsruhe என்ற நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றினுள் நுழைந்த இளைஞர் ஒருவர், அங்கிருந்த சுமார் 12 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துக்கொண்டுள்ளார். அவர்களை விடுவிக்கவேண்டுமானால் பல மில்லியன் யூரோக்கள் கொடுக்கவேண்டும் என கேட்டுள்ளார் அந்த இளைஞர்.உடனடியாக அங்கு விரைந்த பொலிஸார் அந்த இளைஞருடன் பல மணி நேரம் பேச்சுவார்த்தை […]













