இந்தியா செய்தி

லக்னோ அணிக்கு 218 ஓட்டங்களை நிர்ணயித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 6வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் சிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற லக்னோ அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், தேவன் கான்வே ஜோடி அபாரமாக விளையாடி சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர்.

கெய்க்வாட் 57 ரன்களும், கான்வே 47 ரன்களும் சேர்த்தனர். சிவம் துபே 27 ரன்கள் சேர்த்தார். அதன்பின்னர் மொயீன் அலி (19), பென் ஸ்டோக்ஸ் (8), ரவீந்திர ஜடேஜா (3) என சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.

இரண்டு சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்திய கேப்டன் டோனி, அடுத்த பந்தில் அவுட் ஆனார். அதிரடி காட்டிய அம்பதி ராயுடு ஆட்டமிழக்காமல 27 ரன்கள் விளாச, சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.

லக்னோ தரப்பில் மார்க் வுட், ரவி பிஸ்னோய் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்குகிறது.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content