இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகும் ரணில் – உறுப்பினர்களுக்கு விடுத்த உத்தரவு

2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

அதற்கு முன் எந்தத் தேர்தலையும் நடத்துவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரச உயர்மட்டம் தெரிவிக்கின்றது.

இந்த ஜனாதிபதி தேர்தலுக்காக இப்போதே தயாராகுமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்று அந்தத் தகவல் கூறுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பணத்தைப் பெற்று ஓரளவாவது பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்துவிட்டு ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால் அதில் தான் வென்றுவிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே நம்பியிருந்தார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் பணம் உறுதியாகியுள்ளது. முதலாம் தவணைப் பணமும் கிடைத்துள்ளது. பொருட்களின் விலைகளும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்துள்ளன.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி எதிர்வரும் 2024 ஆண்டு ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி அதில் தான் வென்று காட்ட ரணில் திட்டம் வகுத்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் பொதுவேட்பாளராகக் களமிறங்குவதே ரணிலின் தீர்மானமாக உள்ளது என்றும் அரச உயர்மட்டம் மேலும் தெரிவிக்கின்றது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content