இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

ஷேக் ஹசீனாவை நாடு கடத்துமா இந்தியா? வெளியானது அறிவிப்பு

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் அந்நாட்டிற்கு நாடு கடத்துவது தொடர்பாக எந்தவொரு காலக்கெடுவையும் வழங்க முடியாது என்றும், அவரது ஒப்படைப்பு கோரிக்கை ஒரு முறையான சட்டப்பூர்வ நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்திய தூதுவர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை மீண்டும் அந்நாட்டிற்கு நாடு கடத்துவது தொடர்பாக எந்தவொரு காலக்கெடுவையும் வழங்க முடியாது என்றும், அவரது ஒப்படைப்பு கோரிக்கை ஒரு முறையான சட்டப்பூர்வ நடைமுறையின் கீழ் பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றும் இந்திய தூதுவர் தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

டாக்காவில் தனியார் சிந்தனை அமைப்பு (Think Tank) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலின் போது பேசிய அவர், இது குறித்து இந்திய அரசு பலமுறை தனது நிலப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

“இதற்கென ஒரு குறிப்பிட்ட வழிமுறை உள்ளது. அது சட்டப்பூர்வமான மற்றும் கட்டமைப்பு ரீதியான நடைமுறையாகும். எனவே, அவரது நாடு கடத்தல் தொடர்பாக யாராலும் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது” என்று அவர் கூறினார்.

2024 ஆகஸ்ட் மாதம் பங்களாதேஷில் வெடித்த தீவிர மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது.

அந்நேரத்தில் அவர் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டது குறித்து விளக்கிய தூதுவர், அவர் இந்திய விமானப்படை அல்லது இராணுவப் பிரிவால் அழைத்து வரப்படவில்லை என்பதையும், வங்காளதேச விமானப்படை விமானம் மூலமே அவர் இந்தியாவிற்கு வந்தடைந்தார் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

“அவர் இந்தியா வந்திறங்கிய நேரத்தில், அவர்தான் பங்களாதேஷ் பிரதமராக இருந்தார். அந்த இக்கட்டான சூழலில் ஒரு அண்டை நாடாகச் செயல்படுவதைத் தவிர வேறு வழிகள் எதுவும் நமக்கு இருக்கவில்லை. அவசர கால கட்டத்தில் விமானம் தரையிறங்க அனுமதி மறுத்திருந்தால் நிலைமை மேலும் மோசமடைந்திருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

டாக்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்த நாடு கடத்தல் கோரிக்கை தூதரக ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் மட்டுமே அணுகப்படும் என்பதை இந்தியா இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி