ஜப்பானில் பாடசாலையொன்றில் தீவிபத்து
ஜப்பானின் டோக்கியோவில் உள்ள பாடசாலையொன்றில் இன்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் காயமடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பாடசாலைக் கட்டிடத்தின் நான்காவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து 300 மாணவர்கள் மற்றும் ஊழியர்களை தீயணைப்பு வீரர்கள் அவசரமாக வெளியேற்றியுள்ளனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக அறிவிகக்ப்பட்டுள்ளது.




