காசா அமைதி ஒப்பந்தம்: ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு
TOPSHOT – Estonia’s Prime Minister and newly nomiated EU foreign policy chief Kaja Kallas addresses a press conference at the end of the European Council Summit at the EU headquarters in Brussels on June 28, 2024. Estonian Prime Minister Kaja Kallas said on June 28, 2024, that EU leaders had handed her “an enormous responsibility at this moment of geopolitical tensions” by tapping her as the bloc’s next foreign policy chief. (Photo by JOHN THYS / AFP)
காசா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான புதிய அமைதி ஒப்பந்த வரைவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கைத் தலைவர் காயா காலாஸ் வரவேற்றுள்ளார்.
இந்தத் திட்டம் வெற்றிபெற வேண்டுமானால், இதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறிப்பாக, ஹமாஸ் அமைப்பு இந்த ஒப்பந்தத்தின் விதிகளுக்குக் கட்டுப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவது ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த அமைதி நடவடிக்கையின் ஒரு பகுதியாக இஸ்ரேலியப் படைகள் காசா முனையிலிருந்து வெளியேற வேண்டியது அவசியம் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





