ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயில் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகோடிக்கு சிறை தண்டனை

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க 95 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகின் ஓட்டுனருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஓமர் ஹெய்தாரி (Omar Heidari) என்ற நபருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது அதிக எண்ணிக்கையிலான உயிர்களுக்கு  ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட சட்டத்தை பயன்படுத்தி கேன்டர்பரி கிரவுன் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது. இந்த வழக்குடன் சேர்த்து  புதிய சட்டத்தின் கீழ் இதுவரை 10 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.

ஆங்கிலக் கால்வாயை சட்டவிரோதமாகக் கடந்த 04 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் மேற்படி தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்