வட அமெரிக்கா

கனடாவில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரின் மோசமான செயல்..!

கனடாவில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உயர்நிலை பாடசாலையில் கற்பித்த ரிக் வாட்கின்ஸ் என்ற ஆசிரியருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.குறித்த ஆசிரியர் பாடசாலையில் கற்ற மாணவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகளை மேற்கொண்டதாகவும் குற்றவியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த ஆசிரியர் பாலியல் சீண்டல்களை மேற்கொண்டார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஒட்டாவாவின் ஒர்லான்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த சென் மெத்திவ் உயர்நிலைப் பாடசாலையில் ஆசிரியராகவும், கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளருமாக கடமையாற்றிய வாட்கின்ஸ் என்ற ஆசிரியர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய மாணவர்கள் நீதிமன்றில் ஆசிரியருக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்த ஆசிரியருக்கு எதிராக மொத்தமாக 54 குற்றச்சாட்டுகளை பொலிஸார் பதிவு செய்து உள்ளனர் இதில் 20 குற்றச்சாட்டு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்