செய்தி விளையாட்டு

Women’s T20 WC – இரண்டாவது வெற்றியை பதிவு செய்த வெஸ்ட் இண்டீஸ்

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று ஷார்ஜாவில் நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிகர் சுல்தானா அதிகமாக 39 ரன்கள் எடுத்தார்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கரீஷ்மா 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 12.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 104 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 34 ரன்கள் எடுத்தார்.

நடப்பு தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி