செய்தி விளையாட்டு

Women’s T20 WC – வங்கதேசத்தை வீழ்த்திய இங்கிலாந்து அணி

9வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் இங்கிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 118 ரன்கள் எடுத்தது.

வங்கதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. அந்த அணியின் டேனியல் வாட் மட்டும் சிறப்பாக விளையாடி 41ரன்கள் எடுத்தார் .

119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர். சோபனா மோஸ்ட்ரே மட்டும் 44 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், வங்கதேசம் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி