உலகம்

குழந்தைகளுக்கான மலேரியா தடுப்பு மருந்துக்கு WHO ஒப்புதல்!

குழந்தைகளுக்கான முதல் மலேரியா சிகிச்சைக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில், ஆறு மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளில் 18 சதவீதமானோர் மலேரியாவால் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனால் குழந்தைகளுக்கு சிகிச்சைகள் எதுவும் இல்லை. இதனால் பெரும்பாலான இறப்புகளும் பதிவாகியுள்ளன.

2024-ல் மலேரியாவால் 610,000 இறப்புகள் நிகழ்ந்தன, இதில் ஆப்பிரிக்காவில் சுமார் முக்கால்வாசி பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும்.

மலேரியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை மூத்த குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட மருந்துக் கலவைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், இது “மருந்தளவு பிழைகள், பக்க விளைவுகள் மற்றும் நச்சுத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கிறது” என்றும் உலக சுகாதார அமைப்பு கூறியது.

இந்நிலையல் 2 கிலோ  எடை கொண்ட மிகச் சிறிய குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படும் கோர்டெம் பேபி (Coartem Baby), இந்த சிகிச்சை இடைவெளியை நிரப்பும் என்று மருத்துவத் தலைவர்கள் நம்புகின்றனர்.

இந்த மருந்து, தாய்ப்பால் உட்பட திரவங்களில் கரைக்கக்கூடிய இனிப்பு செர்ரி சுவையுடைய மாத்திரைகளாக வருகிறது.

கோஆர்டெம் பேபி (Coartem Baby) இப்போது WHO-வின் முன் தகுதியைப் பெற்றுள்ளது. இது,   தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் சர்வதேசத் தரநிலைகளைப் பூர்த்தி செய்கிறது என்பதைக் குறிக்கிறது.

மேலும், இது குறிப்பாக சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆப்பிரிக்கா போன்ற, அதிக மலேரியா பாதிப்புள்ள பல நாடுகளில் பொதுத்துறை கொள்முதல் செய்ய வழிவகுக்கும்.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்