உலகம் செய்தி

ட்ரம்புக்கு எதிராக திரும்பிய தீவிர விசுவாசி!

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்குவதை அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபருமான Marjorie Taylor Greene கண்டித்துள்ளார்.

லெபனானில் நடக்கும் கொடூரங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர், தாக்குதல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், தற்போது ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையை வெளிப்படையாக விமர்சித்துவருகின்றார்.

எப்ஸ்டீன் ஊழல் மற்றும் மத்திய கிழக்கு விவகாரங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இவர்களுக்கிடையேயான அரசியல் உறவு முறிந்து போனது.

இவரின் இந்த விமர்சனமானது, ட்ரம்பின் ஆதரவு இயக்கத்திற்குள்ளேயே வளர்ந்து வரும் உள்நாட்டு அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.

அமெரிக்க கிறிஸ்தவர்கள் மத்தியிலும் இஸ்ரேலின் கொடூரச் செயல்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!