Consent Preferences
உலகம் செய்தி

நியூசிலாந்தில் ஒரு ஆசனத்தால் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த ஆளும் கூட்டணி

நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி, பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளதால், மீண்டும் ஆட்சியமைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் இறுதி முடிவுகளின்படி, பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தலைமையிலான ஆளும் கூட்டணி பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளதால், மீண்டும் ஆட்சியமைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட இறுதி முடிவுகளின்படி, ஆளும் கூட்டணி 65 ஆசனங்களைப் பெற்றுள்ளது. எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்குத் தேவையான எண்ணிக்கையை விட ஓர் ஆசனம் குறைவாக உள்ளது.

இதனால், ஏழு ஆசனங்களைப் பெற்றுள்ள ஒப்பர்ச்சூனிட்டி கட்சியின் ஆதரவைப் பெறுவதற்கு அதன் தலைவி கியுலே வொங்குடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தலில் பிரதமரின் தேசியக் கட்சி 40 ஆசனங்களையும், பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 36 ஆசனங்களையும் பெற்றுள்ளன. பசுமைக் கட்சி 17 ஆசனங்களையும், ஏசிடி நியூசிலாந்து 13 ஆசனங்களையும், நியூசிலாந்து ஃபர்ஸ்ட் கட்சி 12 ஆசனங்களையும், தே பாட்டி மாவோரி கட்சி 5 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

இதற்கிடையில், தற்போதைய கூட்டணியில் வின்ஸ்டன் பீட்டர்ஸ் வெளிவிவகார அமைச்சராகத் தொடர்ந்தால் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என ஒப்பர்ச்சூனிட்டி கட்சித் தலைவி தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் பரப்புரை நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், பல்பொருள் அங்காடித் துறையில் போட்டியை உறுதிப்படுத்துதல், சுகாதாரத் துறைக்கான புதிய திட்டம் மற்றும் பாரிஸ் காலநிலை உடன்படிக்கைக்கு மீண்டும் உறுதியளித்தல் உள்ளிட்ட நிபந்தனைகளையும் அவர் முன்வைத்துள்ளார்.

இரு தரப்புக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படாவிட்டால், நியூசிலாந்தில் மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி