Consent Preferences
இலங்கை செய்தி

இலங்கைக்கு அருகே சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு; 7 பேர் கைது

இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதிலிருந்த ஏழு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகள் மற்றும் சர்வதேச கடல்சார் பங்காளிகளுடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு (EEZ) அப்பால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த படகும், கைது செய்யப்பட்ட ஏழு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன கண்காணிப்பு வசதிகள் மற்றும் இலங்கை விமானப்படையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் வான்வழிக் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலம் கடல்சார் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் 2025 ஒக்டோபரில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஒன்றிணைந்த தேசம்’ (A Nation United) போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இந்தக் கைப்பற்றல் இடம்பெற்றுள்ளது.

இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 116 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புடைய போதைப்பொருட்களை கடற்படை கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய 66 படகுகளும், 379 சந்தேகநபர்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நான்கு வெளிநாட்டுப் படகுகளும், 18 வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை