உலகம் செய்தி

ஈரான்மீதான போர்: ட்ரம்பின் அணுகுமுறை குறித்து ஜேர்மன் அதிருப்தி!

ஈரான்மீதான போர் தொடர்பில் அமெரிக்காவின் முரண்பாடான நிலைப்பாடுகள் தொடர்பில் ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் Boris Pistorius
கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.

ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளை கோழைகள் என்று வர்ணிப்பதையும், முன்னுக்குப் பின் முரணான கோரிக்கைகளை முன்வைப்பதையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அத்துடன், முறையான போர்நிறுத்தம் ஏற்படும் வரை ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஜேர்மனி தலையிடாது என்று ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பா தனது சொந்தப் பாதுகாப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்பு கூறிய அமெரிக்கா, தற்போது இராணுவ உதவி கேட்டு அழுத்தம் கொடுப்பது நியாயமற்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி