ராசிபலன்

கன்னி ராசி நேயர்களே கனவு கன்னி கிடைப்பார்கள்

மேஷம் -ராசி:
உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் தொடர்பான பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். பயணம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : மாற்றம் உண்டாகும்.
கிருத்திகை : ஆதாயம் அடைவீர்கள்.

ரிஷபம் ராசி:
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செலவுகளின் தன்மை அறிந்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : சேமிப்பு மேம்படும்.

மிதுனம் -ராசி:
உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களது கருத்துகளை முன் வைப்பீர்கள். தானியம் தொடர்பான வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அடிப்படை கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வரவுகளின் மூலம் கையிருப்புகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு.

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : ஆர்வமின்மை குறையும்.

கடகம் -ராசி:
உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். இசை சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஈடுபாடு உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
ஆயில்யம் : ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம் -ராசி:
தாய்மாமன் வழியில் இருந்துவந்த மனவருத்தம் குறையும். வெளியூர் பயணங்களால் மனதில் நினைத்த எண்ணங்கள் நிறைவேறும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் அதிகரிக்கும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மனநிலை ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

மகம் : வருத்தம் குறையும்.
பூரம் : வாதங்கள் நீங்கும்.
உத்திரம் : அனுபவம் அதிகரிக்கும்.

கன்னி -ராசி:
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். எதிலும் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களை பகிர வேண்டாம். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கல்வி பணிகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு.

உத்திரம் : சிந்தனைகள் மேம்படும்.
அஸ்தம் : புரிதல் ஏற்படும்.
சித்திரை : இன்னல்கள் குறையும்.

துலாம் -ராசி:
குடும்பத்தில் வரவிற்கேற்ப செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உடனிருப்பவர்களால் எதிர்பாராத செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். சமூகத்தை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்.

பொறுமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

சித்திரை : செலவுகள் உண்டாகும்.
சுவாதி : ஆலோசனைகள் கிடைக்கும்.
விசாகம் : மாற்றம் ஏற்படும்.

விருச்சிகம்- ராசி:
வியாபார பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நுண்கலை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

விசாகம் : திறமைகள் வெளிப்படும்.
அனுஷம் : ஆதரவு கிடைக்கும்.
கேட்டை : லாபம் மேம்படும்.

தனுசு -ராசி:
வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் கூட்டாளிகளின் ஆதரவும், ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். தெளிவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்.

மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூராடம் : மாற்றம் உண்டாகும்.
உத்திராடம் : மேன்மையான நாள்.

மகரம் -ராசி:
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மத்தியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தேர்வு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.
அவிட்டம் : ஆலோசனைகள் கிடைக்கும்.

கும்பம் -ராசி.
இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. கடன் தொடர்பான நெருக்கடிகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. போட்டி மனப்பான்மையை குறைத்து கொள்ளவும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்.

அவிட்டம் : சோர்வு உண்டாகும்.
சதயம் : பொறுமை வேண்டும்.
பூரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.

மீனம் -ராசி:
புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமைகள் வெளிப்படும். வாக்குவன்மையின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உலோகம் தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்.

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.
ரேவதி : லாபகரமான நாள்.

(Visited 6 times, 1 visits today)

NR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ராசிபலன்

இன்று உங்கள் ராசியின் அதிர்ஷ்டம்

மேஷம் -ராசி: முக்கியமான முடிவினை எடுக்கும் பொழுது ஆலோசனைகளை பெறவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில்
ராசிபலன்

கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம்

மேஷம் -ராசி: கலை சார்ந்த பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பதற்றமான சூழ்நிலைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும்

You cannot copy content of this page

Skip to content