சமூக நீதித்துறை அமைச்சரானார் வன்னியரசு!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு நேசக்கரம் நீட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர், வன்னியரசு அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சமூகநீதித் துறை அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஐயூஎம்எல் கட்சியின் ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் அடங்கும்.
இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் வன்னியரசு, ஐயூஎம்எல் கட்சியின் ஷாஜஹானுக்கு அமைச்சர்களாக, ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
வன்னியரசு பாபநாசம் தொகுதியிலும், ஷாஜஹான் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




