முதலிடத்துடன் அடுத்த சுற்றுக்குள் நுழையுமா RCB?
IPL தொடரில் இன்று நடைபெறும் 67 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru (RCB), Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.
RCB அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக play-off சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது.
அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று play-off சுற்றில் நுழைந்தது.
இரு அணிகளுக்கும் இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். RCB அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
ஏனெனில் லீக் சுற்றில் முதலிடத்தை பிடிக்கும் அணிக்கு play-off சுற்றில் 2 வாய்ப்புகள் கிடைக்கும். தகுதி சுற்று 1-ல் தோல்வி அடைந்தால் தகுதி சுற்று 2-ல் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.




