செய்தி விளையாட்டு

வடக்கு மாகாண விளையாட்டு விழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“உடல் மற்றும் உள மேம்பாட்டுக்கு விளையாட்டுக்கள் அவசியமானவை. அதேவேளை, தலைமைத்துவப் பண்பு மற்றும் சகோதரத்துவ உணர்வை வளர்த்தெடுப்பதற்கும் விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது.” – என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 18 ஆவது வடக்கு மாகாண விளையாட்டு விழா இன்று சனிக்கிழமை காலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விளையாட்டு விழாவை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்கப்பட்டு விளையாட்டரங்குக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றதுடன், தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றி வைத்தார். பின்னர் விளையாட்டு வீர வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றி வைக்கப்பட்டதுடன், விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வும் இடம்பெற்றது.

தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரால் 18 ஆவது மாகாண விளையாட்டு விழா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.

பிரதம விருந்தினர் உரையில் ஆளுநர், விளையாட்டுக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மன உறுதியையும் வளர்ப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், விளையாட்டின் மூலம் ஒருவருக்கொருவர் மதிப்பளித்தல், இணைந்து செயற்படுதல், தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சகோதரத்துவ உணர்வுடன் செயற்படுதல் போன்ற பல்வேறு பண்புகளை வளர்த்துக்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார்.

இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த விளையாட்டு விழாவின் தொடக்க நாளான இன்று, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன், கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் மற்றும் வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் க.ஏகாந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வீர வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி