சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ள அமெரிக்கா
FILE PHOTO: US soldiers stand with Polish and US flags near M1/A2 Abrams tank outside a hall of 30th International Defence Industry Exhibition in Kielce, Poland September 5, 2022. REUTERS/Kacper Pempel/File Photo
யுரேனியம் அடங்கிய சர்ச்சைக்குரிய வெடி பொருட்களை அமெரிக்கா முதன்முறையாக உக்ரேனுக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரேனுக்கான புதிய உதவிகள் தொடர்பான தகவல்கள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என இரண்டு அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவி 240 முதல் 375 மில்லியன் அமெரிக்க டொலர் வரை பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு உதவியில் உள்ளடக்கப்படும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா இன்னும் இறுதி செய்யவில்லை எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.எனினும் இந்த விடயம் தொடர்பில் வெள்ளை மாளிகை இதுவரையில் பதிலளிக்கவில்லை.





