ஐரோப்பா செய்தி

போர் நீடித்தால்  உணவுப் பற்றாக்குறை அபாயம் ஏற்படும் – பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை

ஈரானில் போர் நீடித்தால், பிரித்தானியாவில் கோடைக்காலத்திற்குள் சில உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அரசாங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மோசமான சூழ்நிலைக்கான முன்னெச்சரிக்கை திட்டங்களில், ஹார்முஸ் நீரிணை மூடப்படுவது மற்றும் கார்பன் டை ஆக்சைடு (CO2) விநியோகத்தில் இடையூறு ஏற்படுவது போன்ற சாத்தியங்கள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன. CO2 என்பது , உணவு பதப்படுத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது.

எவ்வாறாயினும்  தற்போதைக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இல்லை என்று அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை, டெஸ்கோ நிறுவனத் தலைவர் கென் மர்பியும், உணவு விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், விவசாயிகள் அல்லது விநியோகஸ்தர்கள் எந்த அபாயத்தையும் சுட்டிக்காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பின்னர், ஈரான் ஹார்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தியதால், உலகளாவிய அளவில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளன.

இதன் விளைவாக, உணவு உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் உரங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன.

மேலும், உலக பொருளாதாரம் மந்தநிலைக்கு தள்ளப்படக்கூடும் என்றும், அதில் பிரித்தானியா அதிக பாதிப்பை எதிர்கொள்ள கூடும் என்றும் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

பிரித்தானியாவில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தாலும், போர் நீடித்தால் எதிர்காலத்தில் சவால்கள் அதிகரிக்கலாம் என்பதே அதிகாரிகளின் எச்சரிக்கை.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!