பிரித்தானியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கும்? நிபுணர்களின் கணிப்பு!
பிரித்தானியாவில் கடந்த பெப்ரவரி மாதம் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட 0.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த சாதகமான வளர்ச்சி இருந்தபோதிலும், ஈரான் போரின் சாத்தியமான தாக்கம் மற்றும் அதிகரித்து வரும் எரிசக்தி செலவுகள் காரணமாக இந்த ஆண்டிற்கான பொருளாதார வாய்ப்புகள் மந்தமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) சமீபத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான பிரித்தானியாவன் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 1.3 சதவீதத்திலிருந்து கணிசமாகக் குறைத்து 0.8 சதவீதமாக மாற்றியுள்ளது. இது G7 நாடுகளில் மிகப்பெரிய குறைப்பாகும்.
ஈரானில் நிலவும் மோதல் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்ந்து, பணவீக்கம் அதிகரிப்பதால், பிரிட்டன் ‘மந்தநிலை பணவீக்கத்தை’ (stagflation) நோக்கிச் செல்லக்கூடும் என்று சில கணிப்புகள் குறிப்பிடுகின்றன.





