உலகம்

ஜப்பானை தாக்கிய டால்பின் புயல் – 14000 கட்டடங்களுக்கு மின் துண்டிப்பு

ஜப்பானை தாக்கிய டால்பின் புயல் காரணமாக சுமார் 14000 கட்டடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அதேநேரம் குறித்த புயலினால் 05 பேர் வரை காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த புயலானது இன்று கிழக்கு கடற்கரையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா நீர்வழிப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒகினாவாவில் உள்ள குமே தீவிலிருந்து சுமார் 160 கி.மீ (99 மைல்) வடமேற்கில் புயல் இருந்ததாகவும், அது மணிக்கு 15 கி.மீ (9 மைல்) வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

புயலின்போது அதிகபட்சமாக மணிக்கு 162 கி.மீ (89.5 மைல்) வேகத்தில் தொடர்ச்சியான காற்று வீசியதுடன், காற்றின் வேகம் மணிக்கு 216 கி.மீ வரை எட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜப்பானில், ஒகினாவா (Okinawa) மற்றும் ககோஷிமா (Kagoshima) மாகாணத்தில் உள்ள அமாமி (Amami ) தீவு ஆகியவை முக்கியமாகப் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் பகுதிகளாகும்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்