ஆஸ்திரேலியா உலகம் செய்தி

சீனாவுக்கு ‘செக்’: கனிமப் போரில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா கைகோர்ப்பு

சீனாவின் ஆதிக்கம் நிறைந்த 'ஸ்கேன்டியம்' (Scandium) என்ற மிக முக்கியமான அபூர்வ கனிமத்தை (Rare Earth) வெட்டி எடுப்பதற்கான உலகின் முதல் முதன்மைச் சுரங்கத்தைக் கட்டுவதற்காக, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிபந்தனையுடனான கடன் உதவி வழங்குவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

சீனாவின் ஆதிக்கம் நிறைந்த ‘ஸ்கேன்டியம்’ (Scandium) என்ற மிக முக்கியமான அபூர்வ கனிமத்தை (Rare Earth) வெட்டி எடுப்பதற்கான உலகின் முதல் முதன்மைச் சுரங்கத்தைக் கட்டுவதற்காக, ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்றுக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிபந்தனையுடனான கடன் உதவி வழங்குவதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பிற்குப் பிறகு, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்திட்டம் சுரங்கத்திலிருந்து தயாரிப்பு வரை மேலைநாடுகளின் ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் ‘சன்ரைஸ் எனர்ஜி மெட்டல்ஸ்’ (Sunrise Energy Metals) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நியூ சவுத் வேல்ஸின் பை பீல்ட் (Fifield) பகுதியில் அமையவுள்ள இந்தச் சுரங்கம், மேலைநாடுகளுக்கான ஸ்கேன்டியம் விநியோகத்தின் முக்கியத் தூணாக மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தின் இணையதளத் தகவலின்படி, ‘சயர்ஸ்டன் ஸ்கேன்டியம் திட்டம்’ (Syerston Scandium Project), பாதுகாப்புத் துறை, வான்வெளித் தொழில்நுட்பம் மற்றும் 5G/6G தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளுக்குத் தேவையான உலோகத்தை வழங்கும்.

பாதுகாப்பு, விமானங்கள் மற்றும் தரவு மையங்களுக்கு (Data Centers) அத்தியாவசியத் தேவையாக இருக்கும் ஸ்கேன்டியம் கனிமம், பொதுவாக பிற சுரங்கப் பணிகளின் போது ஒரு துணைப் பொருளாகவே (Byproduct) பெறப்படுகிறது.

அலுமினியத்திற்கு வலிமை சேர்ப்பதோடு, வளையும் தன்மை, அதிக வெப்பம் மற்றும் துருப்பிடித்தலைத் தாங்கும் ஆற்றலை வழங்குவதால் இக்கனிமம் மிக உயர்வாக மதிப்பிடப்படுகிறது.

உலகிலேயே அதிக அளவிலான ஸ்கேன்டியம் செறிவு கொண்ட பகுதியாக நியூ சவுத் வேல்ஸ் திகழ்கிறது.

ஸ்கேன்டியம் விநியோகம் மற்றும் பதப்படுத்துதலில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா, கடந்த ஆண்டு பாதுகாப்புப் பொருட்களுக்கான இதன் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்தது; இதுவே அமெரிக்கா புதிய விநியோகஸ்தர்களைத் தேடத் தூண்டுகோலாக அமைந்தது.

சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் நோக்கில், டிரம்பும் ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸும் முக்கியமான கனிமங்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, தலா 1 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உறுதியளித்திருந்தனர்.

சன்ரைஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ‘லாக்ஹீட் மார்ட்டின்’ (Lockheed Martin) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, சுரங்கம் தொடங்கப்பட்ட முதல் ஐந்து ஆண்டுகளுக்குத் தனது ஸ்கேன்டியம் உற்பத்தியில் 25 சதவீதத்தை அந்த வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவெடுத்தது.

உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கவும், தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில் கொள்கையை ஊக்கப்படுத்தவும் அமெரிக்க மத்திய அரசு முக்கியமான கனிமங்கள் மற்றும் பேட்டரி திட்டங்களில் 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யவுள்ளதாக அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி