போலந்து எல்லைக்கு அருகே தாக்குதல் – விமான போக்குவரத்து பாதிப்பு
போலந்து எல்லைக்கு அருகே மேற்கு உக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து போலந்து அரசாங்கம் அபாய ஒலியை எழுப்பியதுடன், போர் விமானங்களையும் விரைந்து அனுப்பியது.
அத்துடன் போலந்தின் இரண்டு விமான நிலையங்களில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
எல்லைக்கு அருகிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையம் தாக்கப்பட்டிருக்கலாம் என்று போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் தெரிவித்தார்.
இருப்பினும் வான்வெளி மீறல்கள் எதுவும் நிகழவில்லை என்று போலந்து இராணுவம் உறுதிப்படுத்தியது.



