உலகம் செய்தி

10 ஆயிரம் படைகளை மத்திய கிழக்கில் களமிறங்கும் ட்ரம்ப்: நடக்கப்போவது என்ன?

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை களமிறக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் நாட்டுடன் சமாதானப் பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனக் கூறப்படும் சூழ்நிலையிலேயே இவ்வாறான ராணுவ நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள 5,000 வீரர்களுடன், தற்போது புதிதாகச் செல்லவிருக்கும் படையில் காலாட்படை மற்றும் கவச வாகனங்களும் இடம்பெற வாய்ப்புள்ளது.

இவர்கள் எங்கு நிலைகொள்வார்கள் என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

இந்தச் சாத்தியமான இராணுவ நகர்வு குறித்து வெள்ளை மாளிகை மற்றும் பென்டகனிடமிருந்து முறையான விளக்கத்தைப் பெற ஊடகங்கள் முயற்சி செய்து வருகின்றன.

அதேவேளை, ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகிவருகின்றது என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி