உலகம் செய்தி

ஈரான் கடந்த 47 ஆண்டுகளைப் போன்றே  தந்திரமாக செயற்படுகிறது – ட்ரம்ப் கருத்து

ஈரானுடன் தற்போது சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஓவல் அலுவலகத்தில்  ஈரான் குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதேவேளை, ஈரான் கடந்த 47 ஆண்டுகளைப் போன்றே சற்று தந்திரமாக செயற்படுகிறது என்றும் அவர் கூறினார்.

ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முயற்சிக்கலாம் எனவும், ஆனால் அமெரிக்காவை அச்சுறுத்துவதை அனுமதிக்கமாட்டோம் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார்.

அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஈரான் தொடர்பாக இன்று இரவுக்குள் மேலதிக தகவல்கள் கிடைக்கும் என அவர் கூறினார்.

எனினும், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் நேரடியாக பதிலளிக்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி