இலங்கை செய்தி

போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

கடலில் இருந்து மீட்கப்பட்ட  போதைப்பொருட்களுடன்  இலங்கை கடற்படையால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்

ஆழ்கடலில் மீன்பிடிப் படகொன்றில் போதைப்பொருட்களைக் கொண்டு சென்றபோது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளுக்காக அந்தப் படகு திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

முதற்கட்ட நடைமுறைகளைத் தொடர்ந்து, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சந்தேக நபர்களின் வயது 24, 36, 46 மற்றும் 48 என்றும், அவர்கள் தேவினுவர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

மீன்பிடிப் படகில் இருந்து சுமார் 161 கிலோகிராம் மற்றும் 108 கிராம் சந்தேகத்திற்கிடமான ஹெராயின் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

இந்நிலையில் மேலதிக விசாரணைகள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!