உலகம்

UFO உள்ளிட்ட இரகசிய கோப்புகளை வெளியிட தயாராகும் ட்ரம்ப் நிர்வாகம்!

UFO உள்ளிட்ட இரகசிய தகவல்களை வெளியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஆகியோர் அறிவித்தனர்.

அமெரிக்க மக்களுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த அசாதாரண நிகழ்வுகளை வெளியிடவுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய UFO கோப்புக்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல்   1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 12 நிலவுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்தகால நிர்வாகங்களைப் போலல்லாமல், ட்ரம்ப் நிர்வாகம் அதிகபட்ச வெளிப்படைத்தன்மையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை வலியுறுத்தியுள்ளது.

அமெரிக்க மக்கள் அவற்றைப் பார்த்துத் தங்களின் சொந்த முடிவுகளை எடுப்பதற்கான நேரம் இது என்று  பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!