உறுதியானது தவெக ஆட்சி! முதல்வராகிறார் விஜய்!!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பேராதரவு வழங்கியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தவெகவுக்கு தமது ஆதரவை இன்று வழங்கின.
மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியும் தவெகவுக்கு நேசக்கம் நீட்டியது.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து, தவெகவுக்கு விசிக ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தவெக ஆட்சியமைக்க தற்போது 120 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்துள்ளது.
ஆட்சியமைப்பதற்குரிய அறுதி பெரும்பான்மை பலத்தை தவெக உறுதி செய்துள்ளதால், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய், உரிமை கோரியுள்ளார்.




